பாரூக் சிகான் -
வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றப்படாமையினை கண்டித்து, நேற்றையதினம் மாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்தின் பிரதான வாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக பல தடவைகள் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையில் சுட்டிக்காட்டிய போதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமையினை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த மாகாணசபை அமர்வு தாமதமாகியுள்ள நிலையில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வடக்கு மாகாண சபை மாதாந்த அமர்வு எதிர்வரும் யூலை 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



