மேல் மாகாணத்தில் அடுத்த மாதம் மேலும் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு
நியமனம் வழங்கப்படும். நான் 2009ஆம் ஆண்டு மேல்மாகண முதலமைச்சராக பதவியேற்கும்போது ஒவ்வொரு பாடாசலையிலும் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிலவிவந்தது. ஒரு பாடசாலையில் 3 ஆசிரியர்களைக் கொண்டும் பாடசாலை நடாத்தி வந்தார்கள். தற்பொழுது 70 வீத ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு மேல் மாகாண பாடசாலைகளில் நியமனம் பெற்றுள்ளனர்.
இன்று மட்டக்குழியில் முகத்துவாரத்தில் உள்ள ஆனந்த மத்திய மகா வித்தியாலயத்தில் மகிந்தோதய ஆய்வு கூடத்தினை மேல்மாகண சபை உறுப்பினர் மொஹமட் பாயிசின் அழைப்பின் பேரில் மேல்மாகன முதலமைச்சரும் கல்வியமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இவ் ஆய்வு கூடத்தை திறந்து வைத்தார். கல்லூரி அதிபர் எம். டபிள்யு திசாநாயக்க, வலய கல்விப் பணிப்பாளர் ஜயந்த விக்கிரமரத்தினவும் கலந்து கொண்டனர்.
அதேபோன்று மேல் மாகணத்தில் உள்ள சகல தமிழ் மொழி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை பெருமளவில் நிலவிவந்தது. எனது பதவிக்காலத்தில் போதியளவு தமிழ் மொழி பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்குச் சான்றாக கடந்த வருட நடைபெற்ற உயர்தர மற்றும் க.பொ.சாதாரண தரத்தில் 60வீத மாணவர்கள் சித்தியெய்தியுள்ளனர். மேல் மாகாணத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் சிந்தனையில் உதித்த மஹிந்தோதய ஆய்வு கூடம் நாடுமுழுவதிலும் 1000 ஏற்படுத்தினார். அதில் ஒரு ஆய்வு கூடமே இன்று மட்டக்குழியில் திறந்து வைக்கப்பட்டது. மாகாணசபை உறுப்பினர்கள் முகமட் பாயிஸ் மற்றும் நௌசர் பௌசியின் முயற்சியினாலேயே இப் ஆய்வு கூடம் இங்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இப்பிரதேச கல்விவளர்ச்சிக்கு மேல்மாகாண சபை உறுப்பிணர்கள் நவ்சர் பௌசி, மொஹமட் பாயிஸ் ஆகியோரே பிரதேச மத,மொழி வேறுபாடுன்றி கொழும்பு வடக்கில் சேவை செய்து வருகின்றனர்.
ஜனாப் பாயிஸ் உரையாற்றுகையில் -
எனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ் மொழி பாடசாலைகளில் 50 மில்லியன் ருபா மேற்பட்ட நிதியில் பல்வேறு கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு மேலதிக நிதி தேவையாக உள்ளது. அதனை முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து தரல் வேண்டும் எனவும் பாயிஸ் வேண்டிக் கொண்டார்.
மட்டக்குழிப்பகுதியில்; உள்ள பாடசாலைகளில் பட்டதாரி, கனனி தொழில்நுட்ப ஆசிரியர்கள் மிகவும் சிறமத்துக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டார்கள். ஆனால் அவ் ஆசிரியர்கள் கல்விப்பணிப்பாளருக்கோ கல்வியமைச்சருக்கோ தெரியாமல் வேறு பாடசாலைகளில் மாற்றம் பெற்றுள்ளனர்.
இதனை கண்டறிய வேண்டும் எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் தெரிவித்தார்.



