அரசாங்கம் பொய் ஜனாதிபதி உண்மை- சுசில் பிரேமஜயந்த

ரசாங்கம் பொய் நாடகம் நடிப்பதாகவும் ஆனால் ஜனாதிபதி உண்மையில் செயற்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கணக்காய்வாளர் சட்டமூலம், தகவல் அறியும் சட்டமூலம் என்பவற்றை இன்னும் பாராளுமன்றில் நிறைவேற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தினார். 

கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார். 

19வது திருத்தச் சட்டம் போன்று 20ம் திருத்தத்திற்கும் ஆதரவு அளிக்கப்படும் என அவர் கூறினார். 

10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பிரதமர் கூறியபோதும் இதுவரை அதற்கான திட்டங்கள் எதுவும் தயார் செய்யப்படவில்லை என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

எதிர்வரும் தேர்தலுக்கென தாங்கள் வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்து அதன்படி செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -