சம்மாந்துரை நெளசாத் அசாத் சாலியுடன் இணைவு!

அஹமட் இர்ஷாட்-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம் நெளசாத் தேசிய ஐக்கிய முன்னணியில் இணைந்து அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியினையும் பெற்றுள்ளார்.

கொழும்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகண சபை உறுப்பினருமான அசாத் சாலியின் தலைமையில் இன்று 18.06.2015 வியாழக்கிழமை அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாகாநாட்டிலே நெளசத் தமது கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவித்தர்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிஹ் கருத்து தெரிவிக்கையில்.. பாராளுமன்றத்தில் தெரிவாகின்றவர்களுக்கு பொலீஸ் நற்சான்றுதல் பெற வேண்டும் என குறிபிடப்படல் அடிப்படை தகுதியாக இருக்குமாயின் பாராளுமன்றத்தில் உள்ள அரைவாசிக்கும் அதிகமானவர்கள் பாரளுமன்ற செல்ல முடியாத நிலைமை ஏற்படும். 

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் பொலீஸ் நற்சான்றுதல் வழங்கப்பட தகுதியாக இருக்கின்ற நெளசாத் எமது கட்சியில் இணைந்து அவருக்கு தேசிய அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளமையானது எமக்கு பெருமை அளிப்பதாகவும். இவ்வாறான அரசியல் வாதிகளைத்தான் எல்லா அரசியல் கட்சிகளும் முதன்மைப்படுத்தி வேட்பாளர்களாக களத்தில் இறக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஏ.எம்.நெளசாத் கூறியதாவது… 

நான் தேசிய ஐக்கிய முன்னணியில் உறுப்பினராகவும் அமைப்பாளராகவும் இணைந்து கொள்வதில் பெருமைப்படுவதோடு, தானும் அசாத் சாலியும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த காலத்திலிருந்து 17 வருடங்கள் அறிமுகமானவர்களாகும். 

அவருடைய அன்மைக்கலத்தின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் என்னை கவர்ந்திருந்தமையினாலும், அவருடைய நேர்மையானதும் துனிச்ச்சல் மிக்கதுமான அரசியல் நகர்வுகளையும், அடிப்படையாக வைத்து உரிய நேரத்தில் அவர் எடுக்கின்ற முடிவுகளில் நான் கவரப்பட்டவன் என்ற முக்கிய காரணத்தினாலேயே அம்பாறை மாவட்டத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மையான அரசியல் கலாச்சாரத்தினை ஏற்படுத்தும் வகையில்தான் அசாத் சாலியுடன் கைகோர்த்து அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியினையும் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -