ரவுப் ஹகீம் என்ற சாணாக்கிய தலைவர் பற்றி சில துளிகள்!

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடைய அரசியல் குறித்து நம்மில் சிலரிடையே அதிருப்திகள் இருக்கலாம், புரிதளின்மைகளின் வெளிப்பாடாகவு அவைகள் இருக்கலாம். ஆனால் முஸ்லிம் தேசிய அரசியலின் அடையாளக் கட்டுமானத்தில் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் ரவூப் ஹகீம் எனும் ஒரு தலைவனின் வகிபாகம் குறித்து அவர் வகுத்த அரசியல் வியூகங்களின் விவேகத் தன்மை குறித்து கட்டாயம் வரலாறு சிலாகித்துப் பேசித்தான் ஆகும்.

1960 ம் ஆண்டு சித்திரை மாதம் 13 ம் திகதி நாவலப்பிட்டியவில் பிறந்த ரவூப் ஹகீம் அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்று  ஒரு சட்டத்தரணியாக வெளியேறி இன்று சட்ட முதுமாணியாக பயின்று தனது கல்விப் புலமையை இயம்பியுள்ளார்.

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நுழைந்த இவர் இன்றய பதினாலாவது பாராளுமன்றத்திலும் ஒரு உறுபினராக உள்ளார் என்பது இவரது பழுத்த அரசியலைக் காட்டுகிறது.குழுக்களின் பிரதித்தலைவராக, அமைச்சராக, பல்வேறு பாராளுமன்றக் குழுக்களின் தலைவராக, உறுப்பினராக கட்சியின் செயலாளராக, உதவிச் செயலாளராக, கட்சியின் தலைவராக, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளராக, பேச்சாளராக, சமூகவாதியாக,கவி பாடும் புலவராக, சட்டத்தரணியாக, மொழி வாண்மையாளனாக, அரசியல் சாணக்கியனாக...... இப்படி நீள்கின்றது இவரின் வடிவங்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவராக கடந்த பதினைந்து வருட கால அவரது தலைமைத்துவ வரலாறு என்பது தான் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படும் என்பதில் ஐயமில்லை.

மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் இந்தக் கட்சியை உடைக்கும் அளிக்கும் சிந்தனைகளுக்கு அரசால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைவரின் மரணத்தினைப் பயன்படுத்தி அதனால் விளைந்த குழப்பங்களைப் பயன்படுத்திப் பலர் அமைச்சர்கள் ஆனார்கள், பிரதி அமைச்சர்கள் ஆனார்கள், திணைக்களத் தலைவர்கள் ஆனார்கள், சபைகளுக்கு தவிசாளர்களானார்கள்.கட்சியைத் துண்டாடி சின்னாபின்னப் படுத்தி குறு நில மன்னர்களாக சிலர் யோசித்தார்கள். முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்தால் நாளை அவர் அமைச்சர் அல்லது அரை அமைச்சர்.இப்படி ஒரு நிலை காணப்பட்ட காலத்தில் இக்கட்சியை பாரமெடுத்த தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் சுமார் ஒரு தசாப்த காலம் எதிர்க் கட்சி அரசியலில் இருந்தார் என்பது மிகப் பெரும் சாதனை எனலாம்.

இச் சூழ்நிலையில் ரவூப் ஹகீம் அவர்களது தலைமைத்துவம் இன்று வரை இந்தக் கட்சியைக் காப்பாற்றிக் கொண்டும் முஸ்லிம்களின் அடையாள அரசியலின் தனிப் பெரும் சின்னமாக இக்கட்சியைக் காப்பாற்றி வருவது அவரின் தலைமைத்துவத்தின் மிகப் பெரும் வெற்றியாகவும் 

மறைந்த தலைவர் அவர்களின் பிறேமதாசவுடனான அரசியல் வெகுவாகப் பலராலும் பேசப்பட்ட ஒரு வியப்பரசியல்.அதே போன்று மகிந்த ராஜபக்ஷ அவர்களுடனான அரசியலை ஒப்பிட்டு நோக்கலாம். மகிந்த ராஜபக்ஸ அவர்களை மிகச் சரியாக எதிர்வு கூறிய ஒரு அரசியல் தலைமை தலைவர் ரவூப் ஹகீம் அவர்களே.
அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யும் இரண்டு தேர்தல்களிலும் ஆதரிக்காது மிகத் தைரியமாக எதிர்த்த ஒரே ஒரு அரசியல் தலைமைத்துவம் இவர் மட்டும்தான் என்றால் மிகையாகாது.ஆனால் அவரின் இரும்புக்கரங்கள் கட்சியைப் பலவீனப்படுத்த எடுத்த சகல அரசியல் நகர்வுகளையும் மிக லாவகமாக எதிர் கொண்டதை மக்கள் மறக்கமாட்டார்கள் என நம்புகின்றேன்.
கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் இடம் பெற்ற பல்வேறு சதித்திட்டங்களை லாவகமாகக் கையாண்டு வெற்றி கொண்ட சாணக்கியன் ரவூப் ஹகீம் எனும் ஆளுமை என்றால் அது மிகை அல்ல. 

உடன்பாட்டு அரசியலையும்,எதிர்மறை அரசியலையும் அவசியத்துக்கும் அவசரத்துக்கும் ஏற்றாற் போல் செய்து முடிக்கும் அவரது அபார ஆற்றல் அவருக்கு நிகர் அவரே. 

மகிந்த ராஜபக்ஸ எனும் மிகப் பெரும் மக்கள் பலம் பெற்ற ஆளுமயுடனான ஒரு மூன்றாம் சிறுபான்மை இனத் தலைவனின் அரசியல் முரண்பாடுகள் எவ்வாறு கையாளப் பட்டது என்பதற்கு தலைவர் ரவூப் ஹகீம் அவர்களது கடந்த காலப் பத்தாண்டு கால அரசியல் ஆய்வு செய்யப் படுவது வராலாற்று முக்கியம் பெறுகிறது. 

அவருடைய அரசியல் வாழ்கையில் தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் அவர் கட்சியைக் காப்பாற்ற எடுத்த பல்முனைப் போராட்டங்களும் அதனோடு எதிர்க் கட்சி அரசியலும் அதன் பிற்பாடு உருவாகிய ராஜபக்ஸ யுகமும் அந்த மிகப் பெரும் பெரும்பான்மை இன நடவடிக்கைகளின் உச்சம் மிகுந்த அரசியல் சூழலில் இந்த நாட்டு முஸ்லிம்கள் மீதான மிகப் பெரும் இன அழிப்பு அட்டூழியங்களுக்கு மத்தியில் இந்த சமூகத்தின் அரசியலை முன்னெடுத்த பக்குவமும் அவரது அரசியலில் அழியாப் புகழை தேடி வைத்திருக்கின்றது. 

தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் இந்தக் கட்சியின் தலைமையாக தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் தவிர யார் தலைவராக இக்கட்சிக்கு வந்திருந்திருந்தாலும் இந்தக் கட்சியின் அழிவு என்பது அடுத்த ஐந்து வருடத்தில் நிகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 

அவருடைய கல்விப்புலம்,மொழியறிவு, சமூகப்பற்று, இறையச்சம், பரந்த அரசியல் அனுபவம் ,பக்குவம், பொறுமை போன்ற சிறப்புக் குணங்கள் தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் நமது தேசிய அடையாளத்தின் வியாபகத்துக்குக் காரணம் எனலாம்.

மருதூர் FARAH

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -