ஜமாஅத்தே இஸ்லாமிய நிறுவனத்தினால் புத்தளத்தில் இலவச கண் சத்திரசிகிச்சை!

இக்பால் அலி-
மாஅத்தே இஸ்லாமிய நிறுவனத்தினால் புத்தளத்தில் இயங்கி வரும் குவைத் வைத்தியசாலை பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வைத்தியசாலையின் ஊடாக கண்ணில் வெள்ளை படருதல் நோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் இதனால் பாதிக்கப்பட்ட சகல இன மக்களுக்கும் இங்கு இலவச கண் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. 

குவைத் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கடந்த காலங்களில் வைத்தியர்கள் வருகை தந்து நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இம்முறையும் பாதிக்கப்பட்ட சுமார் 350 இற்கும் மேற்பட்டோருக்கு புத்தளம் குவைத் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கியிருந்து தேவையான அனைத்து சிகிச்சைகள் உட்பட ஏனைய அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை அவ்வைத்தியசாலை பெற்றுக் கொடுத்துள்ளது.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -