வத்தளை – ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் பாத்திமா ரோஷானா இஸ்மி என்ற முஸ்லிம் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமொன்று 2015 மே மாதம் 7ம் திகதி பதிவானமை அனைவரும் அறிந்ததே.
இந்த கொலையை புரிந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.
வத்தளை – ஹுனுபிட்டி பராக்கிரம மாவத்தையைச் சேர்ந்த 19 வயது யுவதியே கொலை செய்யப்பட்டார்.
நுவரெலியா – லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இக் கொலை எவ்வாறு புரியப்பட்டது என்ற சிசிரிவி கமரா வீடியோ வெளியாகியுள்ளது.
பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக உள்ள அந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.
குறித்த சிசிரிவி வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
தயவுசெய்து இதயம் பலவீனமான நபர்கள், சிறுவர்கள் இதனை பார்ப்பதை தவிர்க்கவும்..!
நன்றி அல்-மசூரா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -