தேர்தலில் நெல்லு மூட்டைக்குள் இருக்கும் கழிவுகள் போன்று சிலர் பறந்துவிடுவார்கள் - அமைச்சர் துரைராஜசிங்கம்

திர்வரும் தேர்தலில் பலர் பல தரப்பில் இருந்து வெளிவருவர்கள். அவர்கள் எல்லாம் நெல்லு மூட்டைக்குள் இருக்கும் கழிவுகள் போன்று காற்றில் பிடிக்க எங்கே பறந்து விடுவார்கள் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் காற்றில் உதிர்த்தினால் உதிர்த்தும் இடத்திலேயே விழும் நெல்லு மணியாகவே இருக்கின்றது என் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லடிவட்டை கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

எமது மாவட்டத்தைப் பொருத்த மட்டில் அத்துமீறிய குடியேற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. முன்னர் போராட்டம் இடம்பெற்ற காரணத்தினால் அவர்களால் இவ்வாறு அத்துமீறி குடியேற முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்குகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால். நாமும் மத்திய அரசாங்கமும் ஒரு இணக்கமான அரசியலுக்குள் வரவேண்டும். அவ்வாறு இணக்கம் என்று சொல்லும் போது அது எமக்கு அழுத்தம் கொடுப்பவர்களுடன் நாம் இணக்கம் செய்து கொள்ள முடியாது எமக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுடன் தான் செய்து கொள்ள முடியும்.

முதல் எம்மை அழுத்தத்திற்குள் இடுபவர்கள் தான் இருந்தர்கள் ஆனால் தற்போது அவ்வாறு இல்லை நாம் சொல்வதையும் கேட்டு நமக்கு ஏற்றவற்றைச் செய்யக் கூடிய ஒரு நிலையும் உண்டாகியுள்ளதை உணர முடிகின்றது.

தற்போது மாகாண சபையில் எமக்கு இரு அமைச்சுப் பதவிகளும் ஒரு பிரதித் தவிசாளர் பதவி கிடைத்திருக்கின்றது. ஆனால் இதனைக் கொண்டு மாகாண சபையில் இருக்கும் குறைந்தளவு நிதியினை வைத்து பெரிதாக எதனையும் செய்து விட முடியாது. ஆனால் மத்திய அரசாங்கத்திடம் எதனையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் உரிமமாக இதனைப் பாவித்து செயற்பட முடியும்.

தற்போது மத்தியின் நிலை சற்று மோசமாக இருக்கின்றது. ஏனெனில் அங்கு இருப்பவர்களில் அதிகம் மஹிந்தவின் ஆட்கள் அரசாங்கம் ஒரு திட்டத்தினைக் கொண்டு வந்தால் அதனை மஹிந்தவின் ஆட்கள் எதிர்க்கின்றனர். அவர்கள் யாருடைய தரப்பு என்று இன்னும் தெளிவே இல்லை. அண்மையில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்து விட்டார் மஹிந்த ஒரு போதும் பிரதம வேட்பாளராக நியமிக்கப்படமாட்டார் என்று. அந்த வகையில் மஹிந்த கௌரவமாக ஒதுங்கிக் கொள்வதே சிறந்தது. இல்லாது விட்டால் பெரிய பெரிய அவமானங்களை சந்திக்க வேண்டி ஏற்படும் அது அவரைப் பொருத்த விடயம்.

எதிர்காலத்தில் ஒரு தேர்தல் இடம்பெறும் போது இரண்டு பாரிய கட்சிகளும் இணைந்தே அரசாங்கம் அமைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும். அதனைத் தீர்மானிக்க வேண்டியது அங்குள்ள மக்கள். ஆனால் எமது வடக்கு கிழக்கைப் பொருத்த மட்டில் எமது மக்கள் தீர்மானிக்க வேண்டும் இங்கிருந்து செல்பவர் ஒரு தரப்பைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். அதுவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகத் தான் இருக்க வேண்டும்.

எமது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்த மட்டில் எமது கட்சி சார்பில் நான்கு பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்ல முடியும். அந்தளவு வாக்குப் பலம் எம்மிடம் இருக்கின்றது. ஆனால் நாம் அதனைப் பயன்படுத்துவது குறைவு அசண்டைத் தனமாக இருந்து விடுகின்றோம் இந்த நிலையினை மாற்ற வேண்டும்.

இவ்வாறு மத்தியில் ஒரு சாதாரண நிலை ஏற்படும் போது எமது பக்கம் இருந்து அதுவும் குறிப்பாக எமது மாவட்டத்தில் இருந்து நான்கு பேரை நாம் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். எமது வாக்குகளை சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. ஜனவரி எட்டாம் திகதி எமது வாக்குப் பலத்தினை அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.

இந்த ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் எம்மைக் கண்டு ஓடி ஒழிந்த மக்கள் தற்போது அவர்கள் மனம் திறந்து எம்முடன் பேசுகின்றார்கள். ஏனெனில் கடந்த அரசாங்கத்தினால் ஏதும் நடந்து விடுமோ என்ற பயம் அனைவர் மத்தியிலும் இருந்தது. எமது மனதினுள் இருக்கும் விருப்பத்தையே செய்ய முடியாத ஒரு நிலை இருந்தது. அவ்வாறு இருந்த ஒரு நிலையையே எமது வாக்கு மாற்றியமைத்தது.

எனவே இனிவரும் தேர்தல்களில் நாம் எமது வாக்குப் பலத்தினை சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும். முன்னர் நாம் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்கின்றோம். ஆனால் அப்போதைய சூழ்நிலையும் அப்போது இருந்த அரசாங்கமும் ஒரு இணக்க அரசியல் செய்வதற்கு உகந்ததாக இல்லை. ஆனால் தற்போது நாம் அதேபோல் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வோமாக இருந்தால் அவ்வேளை தற்போது இருப்பது போல் அரசாங்கம் உருவாகும் பட்சத்தில் இணக்கமான அரசியல் நிலை ஏற்படும் நாம் அவ்வாறு இணக்கமான அரசியலுக்குள் வரும் போது எமது விடயங்கள் சர்வதேசம் வரை இருக்கின்றன. அவற்றை இன்னும் பலப்படுத்திக் கொண்டு முன்னேறலாம்.

தற்போது இருக்கின்ற சூழலில் எதிர்வரும் தேர்தலில் பலர் பல தரப்பில் இருந்து வெளிவருவார்கள். யானை, வெற்றிலை, மணி, இன்னும் பல அத்தோடு நாம் திருடர் என்பதை நாம் திராவிடர் என்று மாற்றி ஒரு அணியினரும் வெளிக் கிளம்பியுள்ளார்கள். இவர்கள் எல்லாம் நெல்லு மூட்டடைக்குள் இருக்கும் கழிவுகள் போன்று காற்றில் பிடிக்க எங்கே பறந்து விடுவார்கள். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் காற்றில் உதிர்த்தினால் உதிர்த்தும் இடத்திலேயே வயிழும் நெல்லு மணியாகவே இருக்கின்றது. நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் தான் எமது வேலைகளை நாம் உறுதியாகச் செய்து கொள்ள முடியும். நாளைய பாராளுமன்ற உறுப்பினர்களை எமது மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ந.குகதர்சன்,





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -