நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பிணை மனு கோரிக்கை பரிசீலனையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குறித்த மனு நீதிபதி சரோஜனி குசலா முன்னிலையில் இன்று (08) பரிசீலனைக்கு வந்தபோது எதிர்வரும் 15ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
மனு தொடர்பில் எதிர்ப்புக்கள் இருப்பின் அதற்கு முன்னர் சமர்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ கடுவல நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.(ந)
