ஜனாதிபதி - பாகிஸ்தான் இராணுவத் தளபதி இடையே சந்திப்பு!

லங்கை வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரபீல் ஷரீப் இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். 

இரு நாடுகள் மற்றும் வலய ஒத்துழைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நட்பு நாடுகள் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்பட இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 

இதன்போது பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -