இலங்கையில் ஓரின சேர்கையாளர்களின் உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் வெளியிட்ட தகவலை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியினர் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை அறியவில்லை. கடந்த 10 வருடங்களாக நாட்டு மக்களை மாடுகளாக்கியது போல், தேசிய சுதந்திர முன்னணி தற்போது இவ்வாறான பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது எனவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முஸம்மில் நேற்று கூறிய ஓரினச்சேர்கை செய்தியினை வாசிக்க ---->
முஸம்மில் நேற்று கூறிய ஓரினச்சேர்கை செய்தியினை வாசிக்க ---->