ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவளிக்க இலங்கை விரும்பம் தெரிவித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி ஓரினச் சேர்க்கை தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க ஓரினச் சேர்க்கையை ஏற்க இலங்கை தீர்மானித்தமை யாருடைய முடிவின்படி எனவும் முஸம்மில் இங்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும் ஐக்கிய நாடுகள் சபையின் குறித்த யோசனைக்கு தெற்காசியாவின் ஏனைய நாடுகள் எதிர்ப்பு வௌியிட்டு வருவதாகவும் இலங்கை மாத்திரமே இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.