அபூ - இன்ஷாப்-
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதர வைத்திய சாலை கடமையாற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் , தாதிய உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய படிநிலை உத்தியோகத்தர்கள் ஒன்றினைந்த இன்று (25) வியாழக்கிழமை 24 மணிநேர பணிப்பகிஷகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதர வைத்திய சாலையில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் இருக்கத்தக்கதாக அம்பாறை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அத்தியட்சகரை மேலதீகமாக இவ் வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமித்ததை கண்டித்தே இந்த பணிப் பகிஷகரிப்பு இடம்பெற்று வருகின்றன.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் கலாநிதி டீ.எம்.ஆர்.பி.திசாநாயக்கவினால் ஒப்பமிடப்பட்ட 2015.06.24ம் திகதியிடப்பட்டு இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாகும்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனைப் பிராந்திய செயலாளரும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதர வைத்திய சாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டாக்டர் எம்.ஐ.எம்.சிறாஜ் கருத்து தெரிவிக்கையில் வைத்திய அத்தியட்சகர் ஒருவர் எமது வைத்திய சாலைக்கு நியமிப்பது தொடர்பாக எங்களுக்க எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை ஆனால் தற்பொது நடைபெற்றுள்ள நியமனமானது வழமைக்கு மாறாக ஒரு வைத்திய அத்தியட்சகர் இருக்கத்தக்கதாக நியமனம் செய்யப்படுவது ஒரு கண்டிக்கதக்க செயற்பாடாகும் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எமது வைத்திய சாலையில் ஒரு வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டு அவர் தமது கடமைகளை சிறப்பானதாக செய்து வருகின்ற போது இந்த நியமனம் சிலரினருடைய அரசியல் காட்புணர்சிகாரணமாக திட்டமிட்ட செயற்பாடக அமைவதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பாக அரச மருத்தவ அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துக்கு தெரியப்படுத்தி அவர்களின் அனுமதியுடனே மெற்கொள்ளுகின்றோம்.
இந்த மெலதிக முறைகேடான முறையில் செய்யப்பட்ட நியமனத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டும் எனவும் இவை இரத்துச் செய்யத் தவரும் பட்சத்தில் உடனடியாக கல்முனைப் பிராந்தியத்துக்குட்பட்ட வைத்திய சாலைகளினதும் வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றினைந்து பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று இந்த வைத்திய சாலைக்கு வரும் அவசர நோயாளர்களின் நலன்கருதி விஷேட எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பணிப்பகிஷ;கரிப்பில் ஈடுபட்டிருந்த போது நூற்றுக்கணக்கான பலதரப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகள் தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சரே வைத்தியசாலைக்குள் அரசியல் வேண்டாம் , வைத்தியசாலையை வளரவிடு, நோயாழிகளுக்கு சேவை செய்யவிடு, டாக்டர்கள் மீது கை வைக்காதே போன்ற பல வாசகங்கள் காணப்பட்டன



