இர்ஸாத் ஜமால்தீன்-
பொத்துவில் அல்- இக்ரா கல்வி நிலையத்தில் ஆரம்ப கனணி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (25) இடம் பெற்றது.
கல்லூரியின் பணிப்பாளர் ஆர். ராசுடீன் ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இன்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் எம். எஸ் அப்துல் வாசித். பொத்துவில் பிரதேசத்திற்கு கனணி கற்கையை அறிமுகம் செய்த அல்- பஹ்ரிய முஸ்லிம் வித்தியாலத்தின் அதிபர் கே. ஹம்ஸா ஆகியோர் பிரதம அதீதிகளாக கலந்து இதன் போது சவிசாளரினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி வளர்ச்சிப் பணியை பாராட்டும் வகையில் கல்லூரி நிறுவாகம், அதன் ஆசிரியர்களால் பொண்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

