சாய்ந்தமருது கடற்கரை வீதி: குப்பை வீதியாக மாறியுள்ளது - கவனிப்பார்களா அதிகாரிகள்?

எம்.எம்.ஜபீர்-

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 17ஆம் பிரிவு கடற்கரை வீதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பிரதேசம் குப்பை மேடாக காட்சியளிப்பதாகவும். இதன்காரணமாக இந்த பிரதேசத்தில் தூர்நாற்றம் வீசுவதாகவும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அல்-மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாகவும் லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலத்திற்கு பின்புறமாகவுள்ள வீதியின் அருகிலேயே குப்பைகள் குவிந்து கிடைப்பதனால் தூர்நாற்றம் காரணமாக இவ்வீதியால் பயணிக்க முடியாதுள்ளதாக பிரயாணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

காகம் போன்ற பறவைகள் அதிலுள்ள கழிவுப் பொருட்களை எடுத்து சென்று வீடுகளின் கூரைகளிலும், கிணறுகளிலும் இட்டுச் செலவதனால் சூழல் மாசடைவதாகவும் பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பிரதேசத்தில் மக்களினால் வீசப்படும் குப்பைகளை தினமும் கல்முனை மாநகர சபையினால் அகற்றி துப்புரவு செய்யுமாறு பிரதேச மக்களும் பிரயாணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -