தட்டை தாரை மணல்
துள்ளி விளையாடும்
பெருமணல்
மட்டு மேடு கொள்ளாத
அட்டாளைச்சேனை ஊரு.
ஆல விழுதாய் அடுத்தடுத்து வீடு
அடுத்த மதம் அல்லாத ஊரு
வேற்று மொழி இல்லாத ஊரு
விளையாட்டில் சிறந்த ஊரு
அட்டாளைச்சேனை ஊரு
அலைபோடும் நெல் வயலும்
அழகு தரும் பறன்களும்
அசைந்தோடும் அருவிகளும்
அலைந்தோடும் மான்களும்
அழகு தரும் சேனை ஊரு
கற்றலில் இடம் பிடித்த ஊரு
கலையழகு பெற்ற ஊரு
கலைக்கூடம் நிறைந்த ஊரு
கல்லறைகள் அற்ற ஊரு
அட்டாளைச்சேனை ஊரு
மாபெரும் கோணாவத்தை ஆறு
மருங்கோரம் மடிந்த தென்னை
மரத்தடியில் மானிடர் கூட்டம்
மனந்தழுவும் பனித் தென்றல்
மகிழ்வுதரும் சேனை ஊரு
ஆழிக்கடல் கடல் பேரழகு
ஆதிவாசி குடிசை சாரலும்
அடுக்கு வரிசை தென்றலும்
ஆறுதல் வனபூங்காவும்
அழகு தரும் சேனை ஊரு.
வளைவுகள் நிறைந்த ஊரு
வளைத்து வர அழகு நீரு
வயலுக்கு சிறந்த ஊரு
வரவழைப்பில் பெரும் புகழு
அட்டாளைச்சேனை ஊரு
அக்கரை ஊர் கவிஞ்ஞன்-அட்டாளைச்சேனை -ஏ.எச்.ஜுனைதீன்
