பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட எழுவர் மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர எதிர்வரும் 30ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று (23) பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதவான் தினேஸ் லக்மால் பெரேரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் காவத்தை கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததாக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 6 பேரும் எதிர்வரும் 30ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -