நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படுவதற்கான சாத்தியம்?

நாடாளுமன்றம் நாளைய தினம் (புதன்கிழமை) கலைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் புதிய அரசாங்கம் ஆட்சியமைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே நாளைய தினம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக தற்போது அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்ற 20 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பிலான விவாதம் நிறைவடைந்தன் பின்னர் பெரும்பாண்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்ததை ஜனாதிபதி கலைக்க விரும்புவதாக தெரிவிகப்படுகின்றது.

எனினும் தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 வது திருத்தச்சட்டம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் அதிருப்தி கொண்டுள்ள நிலையில், 20 வது திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதில் சிக்கலான நிலை காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எது எவ்வாறாயினும் நாளைய தினம் நாடாளுமன்றத்தினை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான அரசியல் வட்டாரங்களிலிருந்து தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆத
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -