அபூ-இன்ஷாப்-
தேசிய வீடமைப்பு தினத்தையிட்டு சம்மாந்துறைப் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுக்கான அடிக்கல் நடும் பிரதான நிகழ்வு நேற்று (23) சம்மாந்துறை-12 பிரிவில் திவிநெகும பிரதேச மட்ட உத்தியோகத்தர் எம்.பீ.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்து கொண்டார். கேளரவ அதீதிகளாக சம்மாந்துறைப் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.ஏ.ஹமீட், திட்ட முகாமையாளர் யூ.கே.றஹ்மத்துல்லா, முகாமையாளர் எம்.ஆஷhத், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் தாசீம், சமூகபாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.பீ.ஏ.றச10ல், பிரிவுக்கான திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எகீனாபீவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உரையாற்றுகையில் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சினால் வருடம் தோறும் ஜூன் மாதம் 23ம் திகதி தேசிய வீடமைப்பு தினம் கொண்டாடப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் இந்த வருடம் வீடுகளை அமைத்துக் கொள்ள சம்மாந்துறைப் பிரதேசத்திலிருந்;து குறைந்த வருமானம் பெறுகின்ற வறிய மூன்று குடும்கங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் ஒவ்வென்றுக்கும் 75000 ரூபாவினை வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சினால் வழங்கப்படும் இவற்றைக் கொண்டு ஒருவீட்டினை அமைத்தக் கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதை விடுத்து பாரிய வீட்டுக்கான அடித்தளத்தை போட்டுவிட்டு அடித்தளத்துக்கே பணம் போதாது என்ன செய்வது என்ற கேள்விக்கு இடமில்லை தங்களுக்கு வழங்கப்பட்ட தொகைக்குள் இயலுமான வரையில் வீட்டை அமைத்துக் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.




