தனது தலைவர் சொல்வதை தவிர வேறு எவர் சொல்வதற்கும் தலைசாய்ப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலளார் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமைகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர முன்வைத்த கருத்துக்கு பதில் அளித்த போதே அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் வெவ்வேறு இடங்களில் ஊடக சந்திப்பு நடத்தாமல் கட்சி தலைமையகத்தில் நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.ந
