பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற ஆசனத்தை 225இல் இருந்து 237ஆக உயர்த்த அமைச்சரவையில் ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அதற்கு எதிராக கதைப்பதாகவும் இது அவர்களின் இரட்டை வேடத்தை காண்பிப்பதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் தேவை தமக்கும் இல்லை என்றும் 20ம் திருத்தச் சட்டத்தை வீணடிக்க ஐதேக முயற்சிப்பதாகவும் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தலே தற்போது அவசியம் என்றும் தாமும் தேர்தலுக்கு பயன் இல்லை எனினும் 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.ந
