இஸ்லாமிய வங்கி சேவை தொடர்பாக...: மத்திய வங்கிக்கு பொதுபல சேனா விஜயம்

வ்வித கலந்துரையாடல்களும் இன்றி தீவிரவாத படையெடுப்புகள் வங்கிகளுக்குள் நுழைவதாகவும் இது தொடர்பில் சமூக விவாதங்கள் இடம்பெற்ற போதிலும் கண்டுகொள்ளாத கடந்த அரசாங்கம் குறித்து குற்றம் சுமத்துவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை கொழும்பு மத்திய வங்கி வளாகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வங்கி வரலாற்றில் இஸ்லாமிய வங்கி சேவையை அறிமுகப்படுத்தியதன் ஊடாக நிதி கட்டளை சட்டமூலம் மீறப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொதுபல சேனா இயக்கத்தினர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -