அஸ்ரப் ஏ சமத்-
அரசியலை தூய்மைப்படுத்தும் சிறந்ததோர் அரசியலுக்கு அழைப்புவிடுக்கும் மக்கள் அணிவகுப்பு 10 இலட்சம் கையெழுத்துகளைச் சேர்க்கும் இத் தேசிய வேளைத்திட்டம் இன்று(25) காலை 09.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஆரத்துள்ளது.
மேற்கன்டவாறு இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற பெப்ரல் சங்கத்தின் தலைவர் ரோகன கெட்டியாரச்சி தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் வர்த்தக சங்கத்தலைவர், சனச வங்கியின் தலைவர் மற்றும் தொழிற்சங்கவாதிகள் பிரநிதிகளும் கலந்து கொன்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
அரசியல்வாதிகளுக்கு வேட்பமனு வழங்கும்போது கருத்திற்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இணங்கிய குறிக்கோளுக்கு அமைவாகவே இவ் கையெழுத்து வேட்டை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை வரையிலான 24 மாவட்டங்களுக்கு இவ் ஊர்வல ஊதி வலம் பெரும் 05.07.2015 மாலை 03.00 மணிக்கு கொழும்பு விகாரமாகதேவி தேசிய பூங்காவிற்கு வந்தடையவுள்ளது.
மார்ச் 12 பிரகடனத்தில் கையெழுத்திட்ட சகல கட்சித் தலைவர்களையும் அழைத்து பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு மில்லியன் கையெழுத்துக்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
குற்றவியல், சிறைத்தன்டனை, இலஞ்சம், ஊழல், மதுசாரம், போதைவஸ்த்து, சூதாட்டம், விலைமாதர் விடுதி, இயற்கை உயிர்மூலக் கட்டமைப்பு சிதைத்தல், சுற்றாடல் தீங்கு, அரசியல் அதிகாரத்தை துஸ்பிரயோகம், நாட்டிற்கு பின்னடைவை ஏற்பத்தக் கூடிய நிதிசார் ஒப்பந்தங்கள், வேட்புமனு கையளிக்கின்ற வேட்பாளர் தன்னைப் பிரநிதித்துவப்டுத்தும் குடியிருப்பாளர் அம் மக்களுடன் தொடர்பு அற்றவர் போன்றவர்களுக்கும் அரசியல் கட்சிகள் வேட்புமனு வழங்காது இருக்கவே இக் கையெழுத்து வேட்டை நடைபெறுவதாகவும் பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன கெட்டியாராச்சி தெரிவித்தார்.


