தீவிரவாத அமைப்புக்களைப் பற்றி சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருவதோடு இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்ற கொடூர செயற்பாடுகளான வரிசையில் நிற்கவைத்து தலையை வெட்டுவது, துப்பாக்கியால் சுடுவது,சிலுவையில் அறைவது, போன்ற காணொளிகள், புகைப்படங்கள் என்பனவற்றை பிரசுரிப்பது. மனித நாகரிகத்துக்கு முரணானதுடன் மக்களின் மன நிலையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது.
இப்படியான வன்முறை கலாச்சாரத்தை ஊடகங்கள் முன்னிலைப் படுத்துவதால் சிறுவர்கள் மத்தியில் வன்முறை கலாச்சாரம் தலைதூக்குவதோடு நாட்டின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
திரைப்படங்களில் தனிக்கைக் குழு சான்றிதழ் வழங்குவது போன்று ஊடகங்களுக்கும் இப்படியான ஒர் ஏற்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
