தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.சி. தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. ஸ்டீவன் சன்னின் ஓட்டை 50 லட்ச ரூபாய் பணம் கொடுத்து வாங்க முயன்றதாக கூறி தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர்கள் செபாஸ்டியன், உதய்சிம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பின் அவர்கள் ஐதராபாத் புறநகரில் உள்ள செல்ல பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ரேவந்த் ரெட்டி பணம் கொடுத்த விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தினார். அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, ஆடியோ டேப் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் லஞ்சம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்குமாறு, ரேவந்த் ரெட்டியிடம் சந்திரபாபு நாயுடு பேசிய தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது. இதனால் அவரது c ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இவ்விவகாரத்தில் ஆந்திர கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ள சந்திரபாபு நாயுடு, டேப் போலியானது என்றும், தனது குரலைப்போல் வேறு யாரோ பேசியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
