

இக்பால் அலி-
புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். எமது பாவங்களை மன்னித்து பிரார்த்தனை ஏற்றுக் கொள்கின்ற புனித மாதம். நாம் கடந்த காலங்களில் அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்த போது இறைவனிடம் கையேந்ந்தி எமது நாட்டுக்கு நல்லாட்சியைத் தாருங்கள் எனக் கேட்டு அழுது புலம்பி பிரார்த்தனைகளில் ஈடுபட்டுடோம். அதற்கு இறைவன் எமது பிரார்த்தனையை அங்கீகரித்து ஒரு புதிய நல்லாட்சியைத் தந்துள்ளான்.
இந்த நல்லாட்சியை நாம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். நாம் நிறைவேற்றும் தொழுகையும் அனுஷ்டிக்கும் நோன்பும் பிற வணக்க வழிபாடுகளும் எமது உள்ளங்களுக்கு பக்குவத்தையும் பண்பாட்டையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் பிறருக்கு உதவி செய்யக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அப்போதான் எமது வணக்க வழிபாடுகள் அர்த்தமுள்ளவையாகவும் நன்மை பயக்கக் கூடியவையாக அமையும் என்று முஸ்லிம் சமயம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் வேண்கோளின் பிரகாரம் மாகோல ஆனாதை இல்லத்தின் ஆரதவில் கட்டார் நாட்டு சமூக நல அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வு அக்குரணை குருகொடை ஜும்ஆப் பள்ளிவாசலில் பள்ளி பரிபாலனசபைத் தலைவர் என். எல். எம். சமூக் ஹாஜியார் தலைமையில் 20-06-2015 நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஹலீம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:
ஈகையும் கருணையும் மிக்க இந்த புனித றமழான் மாதத்தில் அடுத்து சகோதர சமூகத்தினருக்கு நாம் முன் மாதரியான செயற்பாடுகளைக் காட்ட வேண்டும். எங்களுடைய பழக்க வழக்கங்களை சில தீய சக்திகள் பொய்யாகச் சித்தரித்து தப்பான எண்ணங்களை அவர்களுடைய மனதில் விதைத்துள்ளனர். அவற்றை நாம் களைய முயற்சிகள் செய்ய வேண்டும். எனினும் எங்கள் மத்தியிலும் நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டிய சில தவறுகள் உள்ளன.
நோன்பு காலங்கள் வந்தால் எமது இளைய தலைமுறையினர்கள் இரவு வேளையில் பொது மக்கள் போகும் பாதைகளில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். இதனால் அவர்களுடைய போக்குவரத்து தடைப்படுவது மட்டுமல்ல அந்தப் பகுதியிலுள்ள அக்கம் பக்கத்து மக்களுடைய தூக்கத்தையும் சீர்குலைக்கும் நிலை ஏற்படுகிறது. நோன்பு காலம் என்பது முழுக்க முழுக்க வணக்க வழிபாட்டுக்குரிய மாதமாகும். இதனை நாம் பூரணமாக அடைந்து கொள்ள வேண்டும்.
நோன்பின் மகத்துவத்தை அறிந்து இஸ்லாமிய அரபுலக நாடுகள் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களையும் கவனத்தில் கொண்டு பல்வேறு உதவிகளையும் பங்களிப்புக்களையும் நல்லாதரவுகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு உதவிகளை வழங்கிய அந்நாட்டவர்களுக்கும் அதனைப் பெற்றுத் தருவதற்கு துணை நின்ற நிறுவனத்தினருக்கு எமது பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும்.
இந்த நாட்டு முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று பட்டு கேட்ட துஆக்கள் அங்கீகரிக்கப்பட்டது போல எங்கள் மத்தியிலும் நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயற்படுவதற்காக அதிக பிரார்த்தனைகளில் ஈடுபடுவதல் வேண்டும். இத்தகைய நல்ல பிரார்த்தனைகள் எமது நாட்டில் ஏனைய சமூகத்தினர்களுக்கு மத்தியில் தலைசிறந்த சமூகமாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்த பள்ளிவாசலின் இமாம் அஷ்ஷெய்க் நத்ரீஸ் நோன்பு பற்றிய விரிவான மார்க்கச் சொற்பொழிவினை நிகழ்த்தினார். இதில் பள்ளி பரிபாலன சபையின் உப தலைவர்களான எஸ். எம். எஸ். உவைஸ். அஷ்ஷெய்க் நௌஷாட், பொருளாளர் எஸ். எம். நளீஸ் உப பொருளாளர் பதுர் சாதிக், செயலாளர் எஸ. ஏ. ஹலீம், இஷாக் ஆகியோர்களுடன் அமைச்சரின் பொது சன அதிகாரி மலீக், இணைப்புச் செயலாளர் றமீம், ஊடகச் செயலாளர் எம். எச். ஏ றஷீ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் பெரு எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.