இன்று நாட்டில் சகல இன மக்களும் மிகவும் ஒற்றுமையாக, சமாதானமாக வாழ்கின்றனர்- ஜனாதிபதி MY3





பொத்துவில் இர்ஸாத் ஜமால்தீன் -

ன்று நாட்டில் பெளத்த, தமிழ், கிரிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் மிகவும் ஒற்றுமையாக, சமாதானமாக வாழ்கின்றனர். இதற்கு மதகுருமார்களின் சிறந்த வழிகாட்டுதல்கள் பிரதான காரணியாக இருக்கின்றது.

இவ்வாறு பொத்துவில் பிரதேசத்தில் உள்ள தொல்பொருல் ஆராய்ச்சி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட சைத்தியை இன்று (20) திறந்து வைத்து அங்கு வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாரு ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் தனது உரையில் தெரிவிக்கையில்,

கடந்து 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தை வெற்றி கொண்டு விட்டோம் என்ற சந்தோசத்தில் நாம் இருக்கின்றோம், இருந்த போதும் யுத்தம் எதனால், எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது? என்பதை நாம் ஒவ்வொருவரும் படிப்பினையாக கொள்ள வேண்டும்.

தான் சுகாதார அமைச்சராக இருக்கும் போது, இங்கு இருக்கும் சிரேஶ்ட வைத்தியர் கபில தலைமையிலனா குழுவினர் வைத்தியர்களாக மாத்திரம் நாட்டிற்கு சேவையாற்றவில்லை.

பின்தங்கிய கிராமங்களில் பெளத்த கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக தன்னை அர்பணித்துச் செயற்பட்டார்கள். அவரின் அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றியே இந்த சைத்தியாகும்.

பலத்த எதிர்ப்பிற்கு மத்தில் இச்சைத்தி நிர்மாணத்திற்கு தன்னை அற்பணிப்புச்செய்த சிரேஶ்ட வைத்தியர் கபில, மற்றும் இராணுவப்படையினருக்கும் தனது விஶேட நன்றியையும் தனது உரையில் தெரிவித்தார்.

தொல்பொருல் ஆராச்சி அதிகார சபை, மற்றும் பொத்துவில் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பிற்கும் மத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஸ அவர்களால் நட்டப்பட்ட கல்லில் நிர்மாணிக்கப்பட்ட சைத்தியையே மைத்திரி திறந்து வைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -