தேர்தல் யாப்பு சீர்திருத்தம் எத்தகைய தரப்பாக இருந்தாலும் அதனை தங்களுக்கு சாதாகமா என்று பார்க்கவேண்டும்


இக்பால் அலி-

தேர்தல் யாப்பு சீர்திருத்தம் பற்றி எத்தகைய தரப்பாக இருந்தாலும் அதனை தங்களுக்கு சாதாக அமைந்துள்ளதாக என கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செயற்படுவது பிழையல்ல. புதிய தேர்தல் முறையானது 1970 , 1972 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முறையல்ல இது. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் அபிமானத்தைப் பெற்ற கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் அபிமானத்தைப் பெற்ற கட்சியாக இருந்தபோதிலும் ஆனால் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. 

அதிகப்படியான மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த போதிலும் குறைந்தளவு எதிர்கட்சியாகக் கூட வரவில்லை. இத்தகைய குறை நிறைகளை நிவர்த்தி செய்வதற்காகத்தான் 1978 விகிதாசாரத் தேர்தல் முறை அறிகப்படுத்தப்பட்டது. 1978 ஆம் கொண்டு வரப்பட்ட தேர்தல் முறையில் குறை நிறைகள் காணப்படுவதற்காகத் தான் 20 வது யாப்பு சீர் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் புதிய தேர்தல் முறையில் சிறிய கட்சிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்வை என்று ஊடகத்துறை பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
குருநாகல் எதுல்கல்புர ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருநாகல் மாஸ்பொத்த ரோயல் கெரெண்ட் ஹோட்டலில் விசேட கூட்டம் 20-06-2015 நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகத்துறை பிரதி அமைச்சர் சாந்த பண்டார அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இந்தப் புதிய தேர்தல் முறையில் தொகுதி வாரியான பிரதிநிதித்துவத்தையும் மாவட்ட மட்டத்திலான பிரதிநிதித்துவதையும், தேசிய மட்ட ரீதியிலான பிரதிநிதித்துவதையும் பெற்றுக் கொள்ள முடியும். குருநாகல் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் விகிதாசாரத் தேர்தல் முறைப்படி மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் எவரும் தெரிவு செய்யப்பட வில்லை. 

அதேபோல வேறு எந்த சிறிய கட்சிகளுடைய உறுப்பினர்களாவது தெரிவு செய்யப்பட வில்லை. ஆனால் இப்புதிய அரசியல் சீர்திருத்தத் தேர்தல் முறையின் மூலம் குருநாகல் மாவட்டத்தில் சிறிய கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. 

அந்தவகையில் இலங்கையில் 160 தேர்தல் தொகுதிகள் உள்ளன. இதிலிருந்து குறைத்து 125 தேர்தல் தொகுதிகள் வர வேண்டும் என்றே ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசனையை முன்வைத்துள்ளது. அவ்வாறாயின் 35 குறைக்க வேண்டும். இதனை விகிதாரசார முறைப்படி பார்த்தால் நூற்றுக்கு 25 விகிதம் குறைக்க வேண்டும். இந்த யோசனை எவர் ஏற்றுக் கொள்வார்கள். மக்கள் விரும்புவது தம்முடைய தொகுதியில் மக்கள் பிரதிநிதி ஒருவரையே இருப்பதையே விரும்புவார்கள். இது உண்மையான கதை. 

பொலன்நறுவை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கு மூன்று தேர்தல் தொகுதிகளே உள்ளன. இதிலிருந்து எப்படிக் குறைப்பது. புத்தளம் மாவட்டத்தை எடுத்தால் ஐந்து தொகுதிகள் உள்ளன. இங்கே எப்படி குறைப்பது. அந்தப் பகுதியிலுள்ள மக்கள் எப்படி ஒத்துக் கொள்வார்கள். இதன் வரலாறு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பல தடவை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பிரதிநிதிகளின் தொகையை அதிகரிக்கும்படியே கூறி வருகின்றனர். இந்தத் தொகையையை குறைக்குமளவு ஆணைக் குழு நியமிக்கப்பட வில்லை. 

நூற்றுக்கு 25 விகிதம் குறைக்கப்படுமாயின் எதுவும் நடக்கமுடியா ஒரு நிலைக்குத் தான் பின்தள்ளப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் பொதுவாகச் பார்ப்மோயின் தேர்தல் தொகுதி 125 என்ற நிலையில்லாமல் 145 என்ற வகையில் இருக்குமாயின் அது பொருத்தமானதாக அமையும். இது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்கான இரண்டாவது யோசனையை முன் வைத்தது. இதனையும் ஏற்கொள்ள முடியாமல் போனால் சிலவேளை சாத்தியமில்லாமற் போக வாய்ப்புக்களும் உள்ளன என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -