ரணில் மஹிந்தவுக்கு சவால்!

நாட்டின் பிரதமராகும் ஆசையிருந்தால் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவிடம் பகிரங்க சவால் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மக்களால் மாத்திரமே தம்மை பிரதமர் பதவியிலிருந்து நீக்க முடியும் என குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிந்தவினாலும் அவரின் சகாக்களினாலும் தம்மை பிரதமர் பதவியிலிருந்து நீக்க முடியாது என தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களினால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பிரதமராக்குவதற்கு மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் நாட்டின் பிரதமராகும் ஆசை மகிந்த ராஜபக்க்ஷவுக்கு இருந்தால் பொதுத்தேர்தலுக்கு தயாராகுமாறும் பகிரங்க சவால் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -