அஹமட் இர்ஸாட்-
அஹமட் இர்ஸாட்:- மத்திய கொழும்பை பொறுத்தவரையில் மூவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக களமிறக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அதிரடி நடவடிக்கையாக கட்சியின் தலைமைத்துவத்தினால் மேயர் முசம்மிலின் மணைவியான பெரோசா முசம்மிலுக்கு மாவட்ட அமைப்பாளர் பதவியும் வளங்கப்பட்டுள்ளதுடன் அவர் பாராளுமன்ற தேர்தலிலும் களமிறக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருக்கின்றது. இந்த நிலையில் உங்களுடைய பாராளுமன்றம் செல்லும் கணவு எந்த நிலையில் இருக்கின்றது.?
முஜீபுர் ரஹ்மான்:- பொதுவாக ஐக்கிய தேசியக் கட்ட்சியானது மூவரைத்தான் தேர்தல்களில் களமிறக்கும். கடந்த தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இரண்டு பேரும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒருவரும் தேர்தலில் போட்டியிட்டனர். ஆகவே இம்முறையும் மூவர்தான் களமிறக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்து வருக்கின்ற அதே வேலையில் கட்சிக்காக தேசிய ரீதியிலும், கட்சியானது ஆட்சி அமைப்பதற்கு மிக முக்கியமாக செயற்பட்டவன் என்ற வகையிலும் எதிர்வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மூலம் போட்டியிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற நம்பிக்கையுடன் கட்சியின் தலைமைத்துவங்களின் முடிவுக்காய் காத்திருக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியானது படுதோல்விகளை சந்தித்து வந்த வேலையில் நீங்கள் தேசிய ரீதியாக நாட்டின் பல இடங்களுக்குச் சென்று கட்சியின் வளர்சிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுப்பட்டவர் என்ற ரீதியில் வருக்கின்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு கட்சியினால் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்ற முழு நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?
முஜீபுர் ரஹ்மான்:- நிச்சயமாக வருக்கின்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிசார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முழு நம்பிக்கையுடந்தான் இருக்கின்றேன். ஏனென்றால் கடந்தகால தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் மட்டுமல்ல தேசிய மட்டத்தில் எல்லா ஊர்களிலும் கட்சியின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டவன் என்ற வகையில் கட்சியின் தலைமையும் உயர்பீடமும் என்மேல் நம்பிக்கை வைத்திருக்கின்றது. ஆகவே நிச்சயமாக வருக்கின்ற பொதுத்தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதியாகியிருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- நீங்கள் தேசிய ரீதியில் கட்சியின் வளர்சிக்காக செயற்பட்ட வகையிலும், மத்திய கொழும்புக்கான கட்சியின் அமைப்பாளராக இருகின்ற நிலையிலும், கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினராக பதவி வகிக்கின்ற நிலையிலும் கூட, திடீரென பெரோசா முசம்மிலை கட்சியின் தலைமையானது கொழும்பு மாவட்டத்துக்கே அமைப்பாளராக நியமித்தமையினை நீங்கள் எந்த கோணத்தில் பார்க்கின்றீர்கள்?
முஜீபுர் ரஹ்மான்:- எங்களுடய நகர பிதாவான முசம்மிலுடைய மனைவியான பெரோசா முசம்மிலுக்கு கட்சியானது கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவியினை கொடுத்துள்ளமையானது கொழும்பு மாவட்டத்தில் பெண்கள் மத்தியில் வேலை செய்யக்கூடிய பெண்களின் தேவைப்பாடு காரணமாகத்தான் அப்பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம். அந்த வகையில் பெரோசா முசம்மிலுக்கு கூட வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை கட்சி வழங்கக்கூடிய நிலைமை இருக்கின்றது. அதனால் எனக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்போ அல்லது எனது அரசியலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்ற நம்பிக்கை என்னிடம் பலமாகவே இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- கடந்த மாகான சபைத் தேர்தலில் 43000 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தீர்கள். சாதரணமாக கொழுப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் 40000 விருப்பு வாக்குகளை பெற்றால் பாராளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுக்கின்றது. இந்த நிலையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா மாகாண சபையினைப் போன்று வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும்40000க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் கொழும்பு மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளாம் என?
முஜீபுர் ரஹ்மான்:- கடந்த மகாண சபை தேர்தலில் ஐந்து முஸ்லிம்கள் போட்டியிட்டுத்தான் அதில் நான் 43000 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தேன். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவது மூன்று முஸ்லிம்கள்தான். அந்த வகையில் நான் நினைக்கின்றேன் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து காணப்படுக்கின்ற நிலையில் கடந்த மாகான சபைத்தேர்தலில் பெற்ற விருப்புவாக்குகளை விடவும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
அஹமட் இர்ஸாட்:- முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதுதான் உங்களுடைய அரசியல் ஆயுதமா? அல்லது கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுடைய உரிமைகளைப் பற்றி பேசுவதனால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐக்கிய தேசியக் கட்சியினை பயண்படுத்தி உங்களுடைய அரசியலை செய்து வருக்கின்றீர்களா?
முஜீபுர் ரஹ்மான்:- என்னுடைய அரசியல் வரலாற்றினை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்களுக்கு இடம் பெறுக்கின்ற அநியாயங்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் எதிராகத்தான் அதிகமாக குரல் கொடுத்தும்,போராடியும் வந்திருக்கின்றேன். ஆனால் என்னுடைய ஆரசியல் போராட்டம், மற்றும் கொள்கையானது முஸ்லிம்களை மட்டுமல்லாது இந்த நாட்டிலும் கொழும்பிலும் வாழுக்கின்ற தமிழர்களுடைய, தோட்டத்த தொழிலாளர்களுடைய, ஏன் சிங்கள மக்களுடைய பிரச்சனைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் அரசியல் கொள்கையாகவே இருக்கின்றது. ஆனால் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் கூடுதலான நிலையில் முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சனைகளுக்காக போராடியும் குரல் கொடுத்தும் இருக்கின்றேன் என்பது மறுக்க முடியாத விடயம் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தில்லை.
அஹமட் இர்ஸாட்:- கடந்த மேதின ஊர்வளத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த் ராஜபக்ஸ்ஸவின் புகைப்படத்தினை மாட்டு வண்டியில் பிணைக்கப்பட்டிருந்த மாட்டின் தலைமேல் ஒட்டி அவரை அகெளரவப்படுத்தியதாக சமுக வலைத்தளங்கள் உங்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தன. அந்த குற்றச்சாட்டுக்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?
முஜீபுர் ரஹ்மான்:- மேதினம் என்பது அரசியல் ரீதியான பிரதிபளிப்புக்களை மக்களுக்கு எடுத்துக்கூறுக்கின்ற ஒரு நாளாகும். அந்த வகையில் நாங்கள் மஹிந்த ராஜபக்ஸ்ஸவையும் அவருடைய அமைச்சில் இருந்த சில அமைச்சர்களையும் பிரதிபளிக்கும் வகையாக ஏற்பாடு செய்திருந்த மேதினக் கூட்டத்தில் மாட்டு வண்டியினை கொண்டு வந்திருந்தோம். மேதினம் என்றால் என்ன என்று தெரிந்திடாத சமூக வலைத்தளங்கள்தான் என்னைப்பற்றி விமர்சித்திருந்தன. அந்த வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸவை அமைச்சர்களான விமல் வீரவன்ச, மற்றும் வாசு தேவ நானயக்கார போன்றோர் மாடாக மாற்றுகின்றனர் என்பதே அந்த மாட்டு வண்டியின் அர்த்தமாகும்.
இதனை விளங்கிக்கொள்ளாத எனது அரசியல் எதிரிகளும். அவர்களுக்கு ஜால்றா போடும் சமூக வலைத்தளங்களுமே எனக்கு சேறுபூசும் ஆயுதமாக அதனை சித்தரித்திருந்தனர்.
அஹமட் இர்ஸாட்:- முஜிபுர் ரஹ்மான் என்றால் ஊடகங்களை நம்பித்தான் அரசியல் மேற்கொள்ளக்கூடியவர் என பரவலாக உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு நீங்கள் கூறும் பதில் என்ன?
முஜீபுர் ரஹ்மான்:- நான் கீழ் மட்டத்திலிருந்து அரசியல் செய்தே இந்த நிலைக்கு இன்று வந்துள்ளேன். மக்களுக்கு எதிராக நடக்கக்கூடிய அநியாயங்களுக்கு எதிராக போராடி, குரல் கொடுத்து, பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று, எத்தனையோ வழக்குகளுக்கு முகம்கொடுத்து, கொழும்பு நான்காம் மாடிக்கும் சென்று வந்துதான், இன்று அரசியலில் இந்த நிலையில் இருக்கின்றேன். இதற்கு ஊடகங்கள்தான் காரணம் என சொல்லுபவர்கள் அவர்களின் அரசியல் நுனுக்கம் இல்லாமையும், அரசியல் கால்புணர்சியுமே காரணம் ஒழியே வேறு எதுவும் கிடையாது என கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன். ஆனால் நான் அரசியலில் ஒரு படியினை அடைந்தற்கு பிற்பாடுதான் ஊடகங்கள் என்னை கண்டு கொள்ளத் தொடங்கின. நான் அடிமட்ட அரசியலினை செய்கின்ற பொழுது எந்த ஊடகமாவது என்னைக்கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது நான் ஊடகங்களில் வருவதானது எனது அரசியல் வளர்சியின் ஒரு படியாகவே நான் பார்க்கின்றே. அதனை தாங்கிக்கொள்ள முடியாத எனது அரசியல் எதிரிகளின் கதகளை நான் ஒரு போதும் கணக்கெடுக்க போவதுமில்லை, அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாருமில்லை.
அஹமட் இர்ஸாட்:- கொழும்பு மாடத்தை எடுத்துக்கொண்டால் வெளி மாவட்டங்களில் பெருமையாக பேசப்படும். ஆனால் மத்திய கொழும்புக்குள் வந்து பார்த்தால்தான் புரிக்கின்றது கொழும்பு மக்களின் கல்வி வளர்ச்சியானது எந்த அளவு கீழ்மட்டத்தில் இருக்கின்றது என்பது. அந்த வகையில் படித்தமகனாக இருக்கின்ற நீங்கள் பாராளுமன்றம் சென்றால் கொழும்பு வாழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காக எதனை செய்வதாக திட்டமிட்டுள்ளீர்கள்?
முஜீபுர் ரஹ்மான்:- முக்கியமாக மத்திய கொழும்பில் இருக்கின்ற முஸ்லிம்களின் கல்வி நிலையானது மிகவும் மோசமான நிலையிதான் இருக்கின்றது. முஸ்லிம்களின் கல்வி நிலை மட்டுமல்ல தமிழ், சிங்களம் பேசும் மக்கள் அனைவரினதும் கல்வி நிலையும் அவ்வாறுதான் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் 20 வருடங்களாக எமது நாட்டினை ஆட்சி செய்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமாகும். மத்திய கொழும்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை என்ற படியினால் சகல அபிவிருத்தியிலும் மத்திய கொழும்பானது புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இதனால்தான் மிக முக்கிய காரணியாக மத்திய கொழும்பில் வாழுக்கின்ற மக்களின் கல்வி நிலையானது பின்தங்கிய நிலையில் இருந்து வருக்கின்றது. எமது கட்சியானது வருக்கின்ற தேர்தலில் அதிகவாக்கு பலத்துடன் ஆட்சி அமைக்கின்ற பொழுது மத்திய கொழும்பின் கல்வி வளர்சிக்காக நான் முன்னின்று உழைப்பேன் என்பதனை இவ்விடத்தில் திடமாக கூறிக்கொள்ள விருப்புக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- மத்திய கொழும்பானது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தன்கையில் வைத்திருந்த வரலாறு மாறி கடந்த தேர்தலில் ஒரு முஸ்லிம் பிரதி நிதியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. அதே போன்று இம்முறை நான்கு முஸ்லிம்கள் மத்திய கொழும்பில் களமிறக்கப்படவுள்ளதாகவும் பேசப்படுக்கின்றது. அதனால் மத்திய கொழும்பில் நான்கு முஸ்லிம்கள் களமிறக்கப்பட்டால் சென்ற முறைபோல் இம்முறையும் ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் மத்திய கொழும்பிலிருந்து பாராளுமன்றம் செல்ல முடியாது. ஆகையினால் தன்னை மீண்டும் பாராளுமன்றம் அனுப்புவதற்கு மத்திய கொழும்பு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என கடுவள தொகுதி பாராளுமன்ற உரூப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்த கருத்தானது கடந்த நவமணி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதனை நீங்கள் எந்தப் பார்வையில் பார்க்கின்றீற்கள்?
முஜீபுர் ரஹ்மான்:- இது சுஜீவ சேனசிங்கவின் கனவாகத்தான் நான் பார்க்கின்றேன். அவருடைய கனவானது மத்திய கொழும்பில் நான்கு முஸ்லிம்கள் போட்டியிட வேண்டும், அவர்கள் அனைவரும் தோல்வியடைய வேண்டும், மத்திய கொழும்பினுடைய வாக்குகள் அவருக்கு கிடைக்க வேண்டும், எதிர்காலத்தில் மத்திய கொழும்பினுடைய அமைப்பாளராக சுஜீவ வரவேண்டும் என பகல் கனவு கணடு கொண்டிருக்கின்றார். அது இப்போதல்ல நீண்டகாலமாக சுஜீவ சேனசிங்க கானுக்கின்ற கனவாகவே இருக்கின்றது. அவருக்கு எந்தக் கனவும் காணும் உரிமையும் இருக்கின்றது. அதனால் எனக்கு அது சம்பந்தமாக எந்த பிரச்சனையும் கிடையாது. கடந்த தேர்தலில் முஸ்லிம்கள் மூவர் போட்டியிட்டு மூவரும் தோல்வியடைந்து உண்மை. அதற்கு முக்கிய காரணமாக கடந்த தேர்தலானது ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட எமது தோல்விக்கு பிற்பாடு இடம் பெற்றதனால்தான் மூவரை இலக்கும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் தற்போது எதிர் நோக்கியுள்ள தேர்தலானது எமது கட்சியின் தேசிய ரீதியிலான பலத்துடன் இடம் பெறும் தேர்தலாகும். அந்த வகையில் இம்முறை மத்திய கொழும்பிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி போடியிடுகின்ற அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களும் வேற்றியடைவார்கள் என்பதனை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- கடந்த அரசாங்கத்தினை மாற்றுவதற்காக உங்களுடைய கட்சியும் நீங்களும் பேறுவளை சம்பவத்தினை வைத்து பொதுபலசேனாவினை அரசியல் ஆயுதமாக பயண்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தீர்கள். தற்பொழுது நூறுநாள் வேலைத்திட்டமும் நிறைவடைந்த நிலையில் உங்களுடைய கட்சியின் செயற்பாடும். புதிய அரசாங்கம் பொதுபல சேனாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளும் உங்களுக்கு திருப்தி அளிக்கக்கூடியதாக உள்ளதா?
முஜீபுர் ரஹ்மான்:- முதலில் நூறுநாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக ஐக்கியதேசியக் கட்சியினை ஒருங்கினைத்துக் கொண்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அதனோடு சேர்த்து ஜாதிக கெல உறுமையவையும் இணைத்துக்கொண்டு, மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும். அந்த வகையிலே இது தனியான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் எனக் கூற முடியாது. நாங்கள் பொதுபலசேனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையினை விடவும் மஹிந்த ராஜபக்ஸ்ஸ இந்த நாட்டில் சாதாரன மகனை போன்று வீதிக்கு வந்து அரசியல் செய்யும் நிலைமையினை இந்த நாட்டில் நல்லாட்சியின் மூலம் உறுவாக்கியுள்ளோம். அதுத்தான் முக்கியமாக ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கின்றேன். இந்த நாட்டில் முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிபார்த்தது வாழ்க்கை செலவினை குறைப்பதோ, தொழில்வாய்ப்பை பெறுவதோ, அபிவிருத்தியோ, கிடையாது. முஸ்லிம்கள் எதிர்பார்த்தது எல்லாம் மஹிந்தவை தோற்கடித்து தங்களுடைய மதத்தினை சுதந்திரமாக பின்பற்றி சுபீட்சமான வாழ்க்கையினை ஜனநாயக இலங்கையில் வாழ்வதாகும். அதனை நாங்கள் தற்போது ஏற்படுத்தியுள்ளோம். எங்களிடத்தில் குறைகள் இருக்கக் கூடும் ஆனால் பொதுபல சேனா என்பது இன்று நாட்டில் பென்சன் சென்ற பொலீஸ் அதிகாரியைப் போன்றே இருக்கின்றனர். அதாவது எந்த அதிகாரமும் அற்றவர்களாகவே இருக்கின்றனர்.
அஹமட் இர்ஸாட்:- அன்று பர்மா முஸ்லிம்களை அழிப்பதற்கு காரணமாய் இருந்த பெளத்த மதகுருவினை முஸ்லிம்களின் பல எதிர்புக்களுக்கும் மத்தியில் பொதுபலசேனாவினர் எமது நாட்டுக்கு அழைத்து வந்து உரையாற்றச் செய்தனர். இன்றும் உங்களுடைய அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கையில் பர்மா நாட்டில் மீண்டும் முஸ்லிகளுக்கெதிரான அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமைக்கு எதிராக ஏன் உங்களுடைய அரசாங்கம் குரல் கொடுக்க தவறுக்கின்றது?
முஜீபுர் ரஹ்மான்:- எங்களுடைய அரசாங்கம் மெளனாமாக இருக்கவில்லை இன்றும் கூட எனது தலைமையில் பர்மா முஸ்லிம்களுக்காக பர்மா தூதரகத்தை நோக்கிய ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டோம். எங்களுடைய அரசாங்கமானது ஒருபோதும் இனவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கக்கூடிய அரசாங்கமாக இருந்ததும் கிடையாது இருக்கப்போவதும் கிடையாது.
அஹமட் இர்ஸாட்:- ஒரு சமூகத்தின் பிரச்சனையானது வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றால் அந்த சமூகத்துக்கான ஊடகமொன்று கட்டாயமாக தேவைப்படுக்கின்றது. இந்த வகையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் தனியான ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கென்று நவமணி பத்திரிகையைத் தவிர தனியா இலத்திரனியல் ஊடகங்கள் எமது நாட்டில் இல்லாமையானது பெறும் குறையாகவே இருந்து வருக்கின்றது இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
முஜீபுர் ரஹ்மான்:- இலங்கையில் முஸ்லிம்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவருவதற்கு முஸ்லிம்களுக்கு என்று தனியன தொலைக்காட்சி அலைவரிசை இல்லாமையானது பெறும் குறையாகவே நான் பார்க்கின்றேன். ஆனால் ஊடகங்களால்தான் முழுமையாக ஒரு சமூகத்தின் பிரச்சனையினை வெளிக்காட்டமுடியும் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தே இருக்கின்றது. சமூகத்தின் தலைமைகளினால்தான் முதலில் சமூகத்தின் பிரச்சனைகள் வெளிக்காட்டப்படுகின்றது என்பதில் நான் ஒருமித்த கருத்துடன் இருக்கும் அதே நேரத்தில் சமூகத்தை பிரதிபளிக்கு தனியான ஊடகங்களின் உதவியானது அந்த சமூகத்துக்கு இருக்கின்ற பாரிய சக்தியாகவே நான் கருதுக்கின்றேன். அந்த வகையில் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தனவந்தர்கள் முன்வந்து பாரிய முதலீட்டுடன் தேவைப்பாடுடையதாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கான தனியா தொலைக்காட்சி அலைவரிசை ஊடகத்ததினை உறுவாக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும். அதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகள் முன்னின்று உழைக்க வேண்டும்.
அஹமட் இர்ஸாட்:- வருக்கின்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு நீங்கள் பிரதி நிதித்துவப்படுத்துக்கின்ற மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு எதைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?
முஜீபுர் ரஹ்மான்:- கொழும்பு வாழ் மக்களுக்கு முதலில் நான் கூறிக்கொள்ள விரும்புவதாவது தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகளை வைத்து தேர்தல்காலங்களில் செயற்படுவதனை முற்றாக தவிர்த்து எவ்வாறு கடந்த ஜானாதிபதி தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ்ஸவை வீட்டுக்கு அனுப்புவதற்கு நாங்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டோமோ அவ்வாறே இம்முறையும் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது பிரதிநிதித்துவங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் வென்றெடுப்பதற்கு முக்கிய பங்காற்றுமாறும், எமது பிள்ளைகளுக்கான சுதந்திரமான எதிர்காலத்தினை உறுவாக்குவதற்கு சிந்தித்து செயலாற்றுமாறும் எனக்கு கடந்த காலங்களில் வாக்களித்த மக்களையும், கொழும்பு மாவட்ட வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.