பொத்துவில் பிரதேசத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வந்த பள்ளிவாயல் ஒன்றிக்கு வியாழக்கிழமை (28) நீதி மன்றத்தின் உத்தரவிக்கு அமைவாக பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொத்துவில் பிரதேசம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
பொத்துவில் கி.சே.பிரிவு-05, சின்ன உல்லை பிரதேசத்தில் R/1681/AM/188 இலக்கதின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்த மபாஸா பள்ளிவாயலுக்கே சீல் வைக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட பள்ளிவாயலின் திறப்பு நீதிமன்றால் தீர்ப்பு வழங்கப்பட்ட பொத்துவில் வைத்தியர் லாபீர் அவர்களின் சகோதரர் தாஹீர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
இப்பள்ளியில் நடைபெற்று வந்த தொழுகை உட்பட குர்ஆன் கற்றுக்கொடுத்தல் போன்ற சகல வணக்கங்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. உட்பிரவேசிப்பிற்கு முழுத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் பள்ளியில் மின் குமிழ்கள் எரியப்படாமல் உள்ளது. இதனால் பள்ளிவாயல் பாலடைந்து போகும் நிலைக்குத் தல்லப்ட்டுள்ளது.
இது பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக குறித்த பள்ளிவாயலின் தற்போதய தலைவர், பொத்துவில் ஜம்மியதுல் உலமா சபை தலைவர் ஆகியோரை அனுகிய போது பின்வருமாறு தமது கருத்துகளை தெரிவித்தனர்.
மபாஸா பள்ளிவாயலின் தலைவர் எம்.பீ.எம் அபுசாலி கீழ்கண்டவாறு தெரிவித்தார்,நான் பள்ளியின் தலைவராக கடந்த ஒரு வருடமாகதான் இருக்கின்றேன். பள்ளிவாயல் அமைந்திருக்கும் காணி பள்ளிக்கு வக்பு செய்யப்பட்டதாக உறுதி இருக்கின்றது. அந்த உறுதியை வைத்துதான் பள்ளிவாயல் கட்டப்பட்டுள்ளது. மாற்றமாக யாருடைய காணியிலும் பள்ளி கட்டப்பட வில்லை. பள்ளி கட்டிய பிற்பாடுதான் பள்ளிக்காணிக்கு உரிமை கோரி வந்துள்ளார் வைத்தியர் லாபீர் அவர்களின சகோதரர் தாஹீர். அதன் பிற்பாடு வழக்கு தொடுக்கப்பட்டு வந்துள்ளது. இன்று தாஹீருக்கு பள்ளிக்காணி சொந்தமானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீப்பு வழங்கப்பட்ட பின்னர் ஸ்தல்திற்கு வந்த பொலீஸார் பள்ளிவாயலுக்குறிய பொருட்களை அப்புரப்படுத்துமாறு கோரினர். பொருட்ககள் ஒன்றும் தேவையில்லை.
பள்ளி உட்பட இதர பொருட்களை உரிய நபருக்கு கொடுக்குமாறு நான் கூறிவிட்டு, பள்ளிவாயலின் திறப்பை கொடுத்து விட்டேன். தற்போது அவர் தாஹீர் பள்ளியை வைத்துக்கொண்டு பேரம் பேசுகின்றார். ஜூம்மாவிற்கு இடையில் திறப்பை தருவதாகு கூறினார். அவரை சந்தித்த போது தர மறுத்து விட்டார்.
மேலும் எனது காணியில் அமைந்திருக்கும் பள்ளிவாயலில் தொழுவதற்கு உங்களுக்கு ஒன்றும் வாஜிப் இல்லை என கூறினார். நாம் அதை பொறுமையாக செவிமடுத்து விட்டு வந்து விட்டோம். பள்ளியை விடுவிப்பதற்கு 40 இலட்சம் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
குறித்த தொகையினை இரண்டு கிழைமைக்குள் தருவதாக எழுத்து மூல ஒப்பந்தம் செய்து, அவ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பள்ளிவாயலை மீள் திறிப்பதற்கு நாம் கேட்டோம். ஆனால் அவர் ஒத்துவரவில்லை. (முன்னால் தலைவர் அப்துல் ரஸாக் அவர்களை தேடி அலைந்த போதும், அவரை எம்மால் அடைந்து கொள்ள முடியவில்லை).
இது தொடர்பாக ஜம்மியத்துள் உலமா சபைத்தலைவரும் மசபாஸா பள்ளிவாயலின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை நன்கு அறிந்தவருமான அப்பிரதேசத்தை சேர்ந்த மெளலவி ஆதம் லெப்பை (ஷர்கீ) அவர்களை அனுகிய போது, இவ்வாறு தெரிவித்தார் “நாஹூர் உம்மா என அறியப்படுபவர் இப்பிரதேத்தை பூர்வீகமாக கொண்டவர். எனக்கு நன்கு பரீட்சயம் ஆனவர். பள்ளிவாயல் அமைந்திருக்கும் காணியை துப்பரவு செய்வதற்கு எனது வீட்டில் இருந்துதான் அவர் சென்றார்.
இப்பிரதேசத்தில் பள்ளிவாயலின் தேவையை உணர்ந்த முன்னால் பரிபாலன சபைத் தலைவர் உட்பட்ட குழுவினர் அப்பெண்னிடம் ஒரு காணித்துண்டை கேட்டபோது தற்போது பள்ளிவாயல் அமைந்திருக்கும் காணியை பள்ளிக்கு வக்பு செய்தார். வக்பு செய்யப்பட்ட காணியில் ஆரம்பகட்டமாக கிடுகினால் குடில் போன்று கட்டப்பட்ட பள்ளிவாயலில் மக்கள் தொழுகையை நிறைவேற்றினர். நானும் அங்கு பல தடவைகள் தொழுததோடு, தொழுகையையும் நடாத்தியுள்ளேன்.
இக்காலத்தில் நான் அறிய பள்ளிவாயல் அமைந்திருக்கும் காணிக்கு யாரும் உரிமை கோரியதோ அல்லது கோருவதற்கு வரவோ கிடையாது .இப்பள்ளிவாயல் அமைந்திருக்கும் காணியின் உறிதிப்பத்திரம் கல்முனைப் பிரதேசத்தை சேர்ந்த பிரசித்தி பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி லியாகத் அலி அவர்களால் பள்ளிக்கு வக்பு செய்யப்பட்டதாக எழுதப்பட்டது.
குடிலில் அமைந்த பள்ளிவாயலை பார்வையிட்டு, அதனை பற்றி பிரிவாக ஆராய்ந்த பின்பே குறித்த உறுதியை அவர் எழுதினார். உறுதி எழுதப்படும் போது அதற்கு சாட்சிக் கையொப்பம் வைத்த இருவரில் நானும் ஒருவன்.
இவ்வாறான ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி பொதுச் சொத்திற்கு உறுதி எழுதும் போது பொய்யான உறுதியில் இருந்து எழுதுவாரா? என்பது ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இப்பள்ளிவாயலுக்கான நிரந்தர கட்டிடத்தின் தேவையை உணர்ந்த பிரதேச மக்கள் உள், வெளிநாட்டில் வசிப்பவர்களின் உதவியைப் பெற்று பள்ளிவாயலுக்கு நிரந்தர கட்டிடத்தை நிர்மாணித்தனர்.
நிரந்தர கட்டிடம் கட்டப்பட்ட பிற்பாடு குறித்த நபர் பள்ளிவாயல் அமைந்திருக்கும் காணி தன்னுடையது என உரிமை கோரியுள்ளார். பின்னர் அவரால் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணை செய்த நீதிபதி பள்ளிவாயல் அமைந்திருக்கும் காணி அவருக்குச் சொந்தமானது என தீர்ப்பு வழங்கியுள்ளது.
எனே நீதிமன்றின் தீர்பையும், நாட்டின் சட்டத்தையும் மதிக்கும் வகையில் நாம் நடந்து கொண்டதுடன், பள்ளிவாயலின் திறப்புகளை பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டோம். இந்த நேரத்தில் குறித்த நபரின் சகோதரர் வைத்தியர் லாபீர் அவர்களும் அங்கு இருந்தார். அவரை பிரத்தியேகமாக அனுகிய நான் “பள்ளிவாயல் தொடர்ச்சியாக இயங்குவதற்கு ஏதாவது ஒரு வகையில் உடன்பாடு ஒன்றிக்கு வர முடியாத?” என வினவினேன். அதற்கு அவர் தனது வீட்டிற்கு வருகை தருமாறு வேண்டிக்கொண்டார்.
அவரின் வேண்டுதலுக்கு அமைவாக அன்று மாலை நாம் அவரின் வீட்டிக்கு சென்று அங்கு இருந்த தாஹீர் உடன் பேசிய போது அவர் எந்த முடிவிற்கும் வரவில்லை. எனது சகோதரர் வைத்தியர் லாபீர் அவர்களுடன் பேசி ஒரு முடிவிற்கு வாருங்கள் என்று சொன்னார் தாஹீர். இதன் பிற்பாடு பக்கத்து அறையில் இருந்த வைத்தியர் லாபீர் அவர்களிடம இதை கூறிய போது, எனது கசோதரன் தஹீருடன் பேசி நள்ள ஒரு முடியவை எடுத்து தருவதாக வைத்தியர் லாபீர் வாக்குறுதி அளித்தார்.
இது தொடர்பான மேலதிய பேச்சுவார்தைகளுக்காக தொடர்பு கொல்வதாக கூறிய வைத்தியர் லாபீர் எம்மோடு தொடர்பை ஏற்படுத்தவில்லை.அவருக்கு அழைப்பை ஏற்படுத்திய போது தஹீர் அவர்கள் காத்தான் குடிக்குச் சென்றதா கூறியுனார். ஆனால் தாஹீர் காத்தான் குடிக்கு செல்லவில்லை. கொழுப்பிற்கே சென்று விட்டார்.
இறுதியாக உங்கள் சகோதரர் தாஹீரின் முடிவு என்ன? என நாம் கேட்டோம். அதற்கு தாஹீர் 40 இலச்சம் ரூபா கேட்பதாக வைத்தியர் லாபீர் கூறினார். . இத்தொகையை எங்களால் திறட்ட முடியாது. நாங்கள் மக்க்ளிடம் பணம் சேகரித்து ஒரு 25 இலட்டம் தருகின்றோம், பள்ளியை விடுவியுங்கள் என சொன்னோம். இப்படியாக 40-25 இலட்சத்திற்கு இடையில் பள்ளிவாயலின் வணக்க வழிபாடுகளை நடைபெருவதற்கு பேரம் பேசப்படுகின்றது. சுற்றுலா விடுதிகளுக்கு விலை மதிப்பிடுவதை போன்று பள்ளிக்கு விலை பேசுகின்றார்” என்று கூறினார்.
பள்ளிவாயல் பிரச்சினை தொடர்பாக தாஹீர் சார்பில் பள்ளிவாயல் நிறுவாத்தினருடன் பேச்சுவார்தை நடாத்தும் தாஹீர் அவர்களின் பொத்துவில் வாழ் வைத்தியர் லாபீர் அவர்ளை சந்தித்து இது விடமாக வினவிய போது எம்மோடு இவ்வாறு நடந்து கொண்டார். நாங்கள் பள்ளிப்பரிச்சினை சார்பாக தகல்வகளை திரட்டுவதற்கு வந்திருக்கின்றோம். பள்ளிவாயல் மூடப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம்? என்று முதலில் வினவினோம்.
எமது கேல்விக்கு பதிலளித்த அவர், பள்ளிவாயல் மூடப்பட வில்லை. அது திறந்துதான் இருக்கின்றது. பள்ளிவாயலின் திறப்புகளை நிறுவாகத்திடம் கொடுத்து விட்டோம் என கூறினார்.
என்ன உடன் படிக்கையின் கீழ் திறப்பு வழங்கப்பட்டுள்ளது என வினவிய போது, எந்த உடன் படிக்கையையும் நாம் செய்யவில்லை. ஒரு ரூபாவையாவது நாம் வாங்கவில்லை. பள்ளிவாயலை இலவசமாகவே கொடுத்துள்ளோம் என்று பதிலளித்தார். அதற்கு நாம், இல்லை..... இல்லை..... நாம் அங்கு நேரில் சென்று பார்த்த போது பள்ளிவாயல் மூடப்பட்டுள்ளது. எமக்கு கிடைந்த தகவல்களுக்கும், நாம் பார்தவைகளுக்கும் நீங்கள் கூறுவது 100 வீதம் முரணாக இருக்கின்று. உண்மையை கூறுங்கள் என கேட்ட போது,என்னால் உண்மையை கூற முடியாது. பள்ளிவாயல் பற்றிய எல்லா விடயங்களும் எனக்குத் தெரியும். ஆனால் என்னால் உங்களுக்கு தரமுடியாது என மறுத்துவிட்டார். இருதியில் அவரின் சகோதரரின் பெயரை நாம் வினவிய போதும் கூட , தனது சகோதரரின் பெயர் தனக்குத் தெரியாது என மறுத்துவிட்டார்.
மேலதிக தொடர்புகளை ஏற்படுத்த
வைத்திரயர் லாபீர் : 0774800049
பள்ளிவாயல் தலைவர் : 0778050544
உலமா சபைத் தலைவர் : 0776734385