அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தில் பாராட்டு விழா -படங்கள்




அபு அலா –

ட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்தில் 2014 ஆம் ஆண்டு கா.பொ சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பாட்டின் கீழ் “வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு” எனும் தொனிப்பொருளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அல் அர்ஹம் வித்தியாலய ஆசிரியர் யூ.எல்.எம்.இப்றாகிம் தலைமையில்  (30) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.எஸ்.உதுமாலெப்பையும், கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம், விஷேட அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கா.பொ சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் இதற்கு காரணகருத்தாக இருந்த ஆசிரியர்களுக்கும் இன்றைய பிரதம அதிதிகளில் ஒருவர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அவரின் சொந்த நிதியிலிருந்து பணப் பரிசில் வழங்கி மாணவர்களையும், ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தி பாராட்டி கௌரவித்தார்.

இந்நிகழ்வின்போது பாடசாலை மாணவர்களால் கலை, கலாசார, நாட்டார் பாடல்கள் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -