அட்டாளைச்சேனையில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்.

அபு அலா –

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையின் கீழ் நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்களும் இளைஞர் கழகங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பாக நாட்டு மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டமும் நாளை சனிக்கிழமை (02) நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

அதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பதிவு செய்யப்பட்டஇளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை (02) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 04 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அம்பாறை மாவட்ட இளைஞர் கழகங்களின் உப தலைவர் யூ.எல்.எம்.சபீர் தெரிவித்தார்.

அம்பாறை, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் இந்த நிகழ்வுகள் நடாத்தசகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், அட்டாளைச்சேனையில் இடம்பெரும் இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட இளைஞர் அதிகாரி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். மேலும் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் லாகுகல ஆகிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்கள் பங்குபற்றும் இந்நிகழ்வு அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட இளைஞர் கழகங்களின் உப தலைவர் யூ.எல்.எம்.சபீர் மேலும் தெரிவித்தார்.

அன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளும் 06 பிரதேச செயலகங்களின் வீரர்களுக்கான கிரிகெட் சுற்றுப்போட்டியும் நடாத்தி வைக்கப்பட்டு இறுதிச் சுற்றும் அன்றைய தினமே இடம்பெற்று சம்பியன் கிண்னமும் பிரதம அதிதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீமினால் வழங்கி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -