மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் பற்றிய அடையாளத்தின் பதிவு நினைவுப் பேருரைகளும் துஆப் பிரார்த்தனையும்!

ஹாசிப் யாஸீன்-
முன்னாள் முஸ்லிம் கலாச்சார இராஜாங்க அமைச்சின் செயலாளர் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் பற்றிய அடையாளத்தின் பதிவு நினைவுப் பேருரைகளும் துஆப் பிரார்த்தனையும் அன்னாரின் சொந்த ஊரான சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் ஏ.பீர்முகம்மது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மைமுனா அஹமட், அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், அம்பாறை மாவட்ட சர்வ சமய தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் உள்ளிட்ட கல்விமான்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் பற்றிய பேருரைகளை முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் சி.மௌனகுரு, கவிஞர் நவாஸ் சௌபி, கவிஞர் ஆர்.எம்.நௌஷாத், முன்னாள் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் ஏ.பீர்முகம்மது ஆகியோர் நிகழ்த்தினர்;.

நிகழ்வின் துஆப் பிரார்த்தனையை சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா நிகழ்த்தினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -