நிந்தவூர் பிரதேச சபைக்கான புதிய கட்டிடம் நாளை திறப்பு-பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம் !

சுலைமான் றாபி-
நிந்தவூர் பிரதேச சபையின் புதிய கட்டிடமும், அதன் முன்னால் அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் நாளை (15) வெள்ளிக்கிழமை பி.ப. 4.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெறவுள்ள இத்திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மு.காவின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மு.கா செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸன்அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரிஸ், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை பழைய கட்டிடத்தில் இயங்கிய நிந்தவூர் பிரதேச சபையானது அண்மையில் கிழக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி தற்காலிகமாக இப்புதிய கட்டிடத்தில் இயங்கிவந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -