மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதியில் அமைந்துள்ள சமூக சேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் சீருடை அறிமுக நிகழ்வு 2015.05.01 வெள்ளிக்கிழமை பி.ப. 04.30 மணியளவில் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் KCDA யின் பிரதித்தலைவர் ஜனாப் ஏ.எம்.எம். முர்ஷிதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ. கே.பீ.எஸ். ஹமீட் அவர்கள் உரையாற்றும் போது இந்நிறுவனமானது இப்பிரதேசத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்குடன் மிகவும் அர்ப்பணிப்புடன் இயங்கி வருவது மிகவும் பாராட்டத்தக் விடயமாகும் அத்தோடு இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் எம்சமூகத்திற்கு பிரயோசனமான வகையிலும் அமைவதாகவும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரியருமான கௌரவ. எஸ்.ஏ. அன்வர் அவர்கள் உரையாற்றும் போது இந்நிறுவனமானது வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் பொதுநல செயற்பாடுகளில் மிகவும் அக்கரை கொண்ட நிறுவனமாகவும் செயற்பட்டு வருவதோடு, மேலும் இந்நிறுவனம் கல்குடாப்பிரதேசத்தில் மிகப்பெரிய சமூக சேவை நிறுவனமாக உருவாக பிரார்த்திக்கின்றேன் எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டதோடு, இந்நிறுவனத்திற்கான சீருடையினை தனது நிதியிலிருந்து ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரியருமான கௌரவ. எஸ்.ஏ. அன்வர் அவர்கள் பெற்றுக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ. கே.பீ.எஸ். ஹமீட், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரியருமான கௌரவ. எஸ்.ஏ. அன்வர், மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். ஏ.எல். அபுல்ஹசன், பிரதி அதிபரும், KCDA யின் தலைவருமான ஜனாப். ஏ.எம். அன்வர், மீராவோடை மீராஜும்ஆ பள்ளிவாயல் பிரதித்தலைவர் அல்ஹாஜ். எச்.எம். பதுருதீன், மீராவோடை மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ஜனாப். எஸ்.எம். சம்சுதீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப். எம்.எல். சியாத் மற்றும் KCDA யின் நிருவாக சபை மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)