ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இம்முறை நோபள் சமாதான விருது

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இம்முறை நோபள் சமாதான விருது வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இனவாதம், மதவாதமற்ற அமைதியான சகவாழ்வுடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான தீர்மானம் மிக்க பணியை ஆற்றியமைக்காக இவ்வாறு நோபள் சமாதான விருது வழங்கப்படக் கூடிய சாத்தியமுண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டுக்கான நோபள் சமாதான விருதிற்கான பெயர்ப் பரிந்துரைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் கோரப்பட உள்ளது.
இதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலவின் பெயரை பரிந்துரை செய்ய உலக சமாதானத்திற்கான அமைப்பு ஒன்று தீர்மானித்துள்ளது.

30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரதான அரசியல் கட்சிகளின் இரண்டு தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்படும் விதம் பிராந்திய வலய நாடுகளுக்கே ஒர் முன்னுதாரணமாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(global)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -