பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை நிபுணர் இன்மையால் அவதியுறும் நோயாளர்கள்

ஏ.எல்.றமீஸ்-

பொத்துவில் ஆதார வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை நிபுணர் இன்மையால் நோயாளர்கள் நீண்ட காலமாக எதிர் நோக்கி வந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

சுகாதார இராஜாங்க அமைச்சரின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும்,பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளருமாகிய ஏ.எம்.தாஜ்ஜூதீன் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் மக்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை பெற்றுத் தந்த சுகாதார இராஜாங்க அமைச்சரும்,முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான எம்.ரீ.ஹஸனலிக்கு யுனெட்டட் சனசமூக நிலையம்,பலா பவுன்டேஸன் தையல் பயிற்சி நிலையம்,ஆகியன கூட்டாக தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும் இவ் வைத்தியசாலைக்கு வைத்திய நிபுணரை நியமிப்பதற்கு இரவு பகல் பாராமல் உழைத்த உதவித் தவிசாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்க்கும் பொத்துவில் மக்கள் நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
சத்திர சிகிச்சை நிபுணரினால் பத்துக்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கான அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக இடம் பெற்றுள்ளாதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -