மக்களுக்காக தியாக உணர்வுடன் பணி புரிபவர்கள் போற்றப்பட்டுவார்கள்- உதுமாலெப்பை MPC

சலீம் றமீஸ்-

க்களுக்காக தியாக உணர்வுடன் பணி புரிபவர்கள் மக்களால் காலமெல்லாம் போற்றப்பட்டு வாழ்த்தப்படுவார்கள். உலகில் வாழ்ந்து மரணிக்கின்ற எல்லோரும் மக்களால் நினைவு கூறப்படுவதில்லை. 

தியாக உணர்வுடன் பண்புள்ளவர்களாக மக்களுக்காக பணி புரிந்த நமது மூத்த அரசியல் தலைவர்கள், மூத்த கல்விமான்கள், மூத்த மார்க்க அறிஞர்கள் போன்றவர்களை இன்னும் நாம் நினைத்து பாராட்டிக் கொண்டிருக்கின்றோம். என அட்டாளைச்சேனை அல்- அர்ஹம் வித்தியாலய க.பொ.த சாதாரண தர பரீட்சையிலும் தரம் 05 புலபை; பரீட்சையிலும் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக நடை பெற்ற 'வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு' நிகழ்வு யு.எல்.எம்.இப்றாஹீம் ஆசிரியர் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்.....

இக் கல்லூரி சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, வளத்தட்டுப் பாட்டுகளுடன் தற்காலிக கொட்டில்களில் இயங்கிய நிலையிலும் கிழக்கு மாகாண மட்டத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 01வது இடத்தைப் பெற்று நமக்கெல்லாம் பெருமையை தந்ததுடன், தொடர்ச்சியான சாதனைகளை நமது மாணவ – மாணவர்கள் புரிந்து வருகின்றனர்.

அல்- அர்ஹம் வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அதிபர், ஆசிரியர் குலாம், பாடசாலை சமூகத்தினரை பாராட்டுகின்றேன். அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் இக் கல்லூரியின் பெயர் எப்போதும் பேசப் பட்டு வருகின்றமை நமக்கெல்லாம் மகிழ்ச்சியை தருகின்றன. 

நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்கள் கவனம் செலுத்துவதால் இன்னும் நமது பிள்ளைகள் சாதனையாளர்களாக உருவாக வாய்ப்பு எற்படும். பாடசாலையில் நமது பிள்ளைகள் சிறந்தவர்களாகவும், ஊக்கமுள்ளவர்களாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றனர். 

இன்றைய நிலைமையில் பெற்றோர்கள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர் நாடகங்களில் காட்டி வருகின்ற விசேட ஆர்வத்தை குறைத்து நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தினால் இன்னும் நமது மாணவர்கள் பல சாதனைகள் புரியக் கூடியதாக இருக்கும்.

நாங்கள்; பாடசாலை மாணவர்களாக இருந்த காலத்தில் மஃரிப் தொழுகைக்குப் பின் நமது பிராந்தியத்தில் எல்லா இல்லங்களிலும் குர்ஆன் ஓதுகின்ற வழமை இருந்தது. இப்போது இந்த நிலமை மாறி வருகின்றது. மாணவப் பருவம் மிகப் பெறுமதியான பருவமாகும்.

 ஆரம்பத்தில் இருந்த உலக கல்விக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட நமது மார்க்க கல்வியில் விசேட கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் உயர் பண்புகளை கொண்ட, ஆளுமையுள்ள படைப்பாளிகளாகவும், மனித நேயம் உள்ளவர்களாகவும் வர வேண்டும் அதற்கான எத்தனங்களை பாடசாலை மாணவப் பருவத்தில் இருந்தே பழக வேண்டும்.

நமது உயிருக்கு மேலான தாய்,தந்தை, ஆசிரியர்களை கௌரவித்து வாழ வேண்டும். வாழ்க்கையில் எப்போதும் உயர்ந்த இலட்சியங்களை எண்ண வேண்டும். சிறிய இலட்சியங்களில் வெற்றி பெறுவதை விட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வி அடைவது மேல் என்ற நிலை நமக்குள் வரவேண்டும்.
கிழக்கு மாகாண சபையின் அமைச்சராக கடந்த ஆறரை வருடங்களாக பணி புரிந்துள்ளேன். எங்களின் அரசியல் அதிகாரத்தை ஒரு போதும் தவராக பாவித்து மக்களுக்கு அநியாயங்கள், பழிவாங்கள்கள் செய்யவில்லை மாறாக நல்லவைகளை எண்ணி மக்களுக்கு சிறந்த பணிகளை புரிந்துள்ளோம். நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முடிந்தளவு மூவின மக்களுக்கும் பணி புரிந்துள்ளேன். 

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு ஆதரவான கிராமங்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் என்னால் முடிந்தளவு உதவிகளைப் புரிந்துள்ளேன்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஏ.எல்.நசீர் அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான சம்பவங்களையும், அரசியல் நாகரீகமற்ற செய்திகளையும் வெளியிட்டிருப்பது குறித்து நாம் எல்லோரும் கவலைப்பட வேண்டியுள்ளது. அரசியல் அதிகாரம் கிடைத்தவுடன் நான் என்ற மமதையுடன் சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மாகாண அமைச்சராக பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை பழி வாங்கியதாக பொய் கூறுகின்றனர். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் கல்விப் பணிப்பாளர்கள் சாட்சியாக உள்ளனர்.

 நாங்கள் ஒரு போதும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை பழிவாங்கவில்லை. மக்களுக்காக நல்லவைகளை எண்ணி செயற்படுத்தியுள்ளோம் என்பதை நமது பிராந்திய மக்கள் நன்கு அறிவார்கள்.
அட்டாளைச்சேனைப் பிரதேச கல்வி வளர்ச்சிக்கு தேசிய காங்கரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பாரிய பங்களிப்புகளை வழங்கி உள்ளார். எதிர் காலத்திலும் எங்களால் முடிந்தளவு கல்வி வளர்ச்சிக்கு பணி புரிய நினைத்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஏ.எல்.நசீர், அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.காசீம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி.கஸ்ஸாலி, அல் - அர்ஹம் வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -