முழு மாவட்டத்துக்கும் தரமான பிரதி நிதித்துவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்- அப்துர் ரஹ்மான் (நேர்காணல்)

மது கட்சியான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதான நோக்கமானது முழு மாவட்டத்துக்கும் ஏற்ற தரமான பிரதிநிதியை தெரிவு செய்வதே என அக்கட்சியின் தேசிய தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் அப்துர் ரஹ்மான் நவமணி வார இதழ் பத்திரிகை மற்றும் இணைய நாளிதல்களுக்காக இடம்பெற்ற நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அப்துர் ரஃமானிடம் தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கான விரிவான பதில்களும் அதனுடைய காணொளியும் எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்:- 
காத்தான்குடியில் முக்கியபுள்ளியாக இருக்கும் நீங்கள், பொருளாதாரம் கல்வித்துறை என்று சமூகத்தில் சிறந்து விளங்கும் நீங்கள்அரசியலுக்குவருவதற்கான காரணம் என்ன?

அப்துர் ரஹ்மான்:- .

அரசியலானது எமது நாட்டில் எந்தத்தரத்தில் உள்ளது என்பதனை எல்லோரும்அறிவார்கள்.அதே போன்று நம் சமூகத்திலும் அரசியலின்தரம் என்ன, அதன் போக்குஏற்படுத்தியுள்ள சீரழிவுகள்என்ன என்பதும் நமக்கு.தெரியும். என்னை பொறுத்தவரையில் நான் ஒரு அரசியல்வாதியாகஎன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில்லை.

மாறாக என்னை ஒர் அரசியல் செயற்பாட்டாளனாகவும் அரசியல் சீர்திருத்தவாதியாகவும்மே அடையாளப்படுத்திக் கொள்ளவிரும்புக்கின்றேன். பொதுவாக அரசிலுக்குல்வருபவர்களில் பெரும்பாலானவர்கள்பொருளாதாரத்தையும் இப்பதவிகளையும், சமூக அந்தஸ்துகளையும் இலக்கு வைத்துத்தான் எமது நாட்டில் அரசியல் செய்கின்றார்கள்.

அல்லாஹ்வின் உதவியினால் சமூகஅந்தஸ்தும், பொருளாதாரமும் சமூக அங்கீகாரமும் எனக்கு ஓரளவு இருக்கின்றது. அரசியலுக்கு நுளைந்துதான் இதனை நான் சம்பாதித்து கொள்ள வேண்டும்என்ற தேவை எதுவும் எனக்கு கிடையாது என்பதனை கூறி வைக்க விரும்புக்கின்றேன்.

அந்தவகையில் இந்த நாட்டில் ஒரு நல்லாட்சியை நோக்கிய அரசியல் சீர்திருத்ததையும் அரசியல் புணர்நிர்மாணத்தையும் மேற்கொள்ளும் பொருட்டே நாங்கள் நேரடி அரசியல் பணியை தொடங்கினோம். அந்த இலட்சியத்தை அடிப்படையாக கொண்டே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம்.

அஹமட் இர்ஸாட்:-
வருக்கின்ற பொதுத்தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் தனித்துபோட்டியிடுமா? அல்லது ஐக்கியதேசியக் கட்சியுடன்சேர்ந்து போட்டியிட உள்ளதா?

அப்துர் ரஹ்மான்:-
வருக்கின்ற பொதுத்தேர்தலில் பல இடங்களில் எமது கட்சி அமைப்பு போட்டியிடுவது பற்றி தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. அது பற்றிய ஊடகங்கள் மூலமாக நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

அது சம்பந்தமாக ஐக்கியதேசியக்கட்சி,முன்னாள் ஜானதிபதி சந்திரிக்கா அம்மையார், மற்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்புடனும்,கலந்துரையாடிவருக்கின்றோம். முடிவுகள் எட்டப்பட்டதும் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவாத என்பது பற்றி மிக விரைவில் அறிவிப்போம்.

அஹமட் இர்ஸாட்:-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது கடந்த ஜனாதிபதி தேர்தகாலத்திலும் அதற்குப் பிற்பாடும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை கூடுதலாக தாக்கி பேசுவதற்கான காரணம் என்ன?

அப்துர் ரஃமான்:-
நல்லாட்சிகான தேசியமுன்னணியானது சமூகத்தில் இருக்கின்ற பிழையான, சமூகவிரோத, தேசவிரோத, மக்கள் விரோத அரசியல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய அரசியல்கலாச்சாரத்தை ஏற்படுத்துவதனை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருக்கின்றது.

அந்த வகையிலே எந்த கட்சியெல்லாம் இது போன்ற சமூக விரோத, தேச விரோத மற்றும் நாட்டின் நலன்களுக்கெதிரான அரசியல் நடவடிக்கைகளை செய்க்கின்றார்களோ அவர்களுக்கெதிராகவே விமர்சித்திருக்கின்றோம். அவர்களை மக்கள் மத்தியில் அம்பலபடுத்தியுள்ளோம். அந்தவகையில் அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமல்ல ஏனைய கட்சிகளும் விட்டதவறுகளை மக்கள் மத்தியில் நாம்சுட்டிக்காட்டியுள்ளோம்.

அஹமட் இர்ஸாட்:- 
காத்தான்குடிக்குவெளியில் உங்களுடைய கட்சியானது இன்னும் மாகாணசபை உறுப்பினரையோ அல்லது உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களையோ பெற்றுக்கொள்ளமுடியாமைக்கானகாரணம் என்ன?

அப்துர் ரஹ்மான்:- 
2006ம் ஆண்டுகாத்தான்குடியில்போட்டியிட்ட பொழுது 20வீதமான மக்கள்எங்களுக்குவாக்களித்திருந்தார்கள். அதே போன்று இரண்டாவது தேர்தலாக 2011ம் ஆண்டுக்கான நகர சபை தேர்தலில் 35வீதமான மக்கள் ஆதரவளித்திருந்தனர். அதனால் எங்களுடைய கட்சியினை கணிசமான மக்கள்ஆதரவினை பெற்ற்கட்சியாக மாற்றியுள்ளோம்.

அல்ஹம்துலில்லாஹ். 2012ம்ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பல இடங்களில் போட்டியிட்டோம். ஆனால் எங்களால் எந்த ஆசனத்தையும்பெற்றுக்கொள்ளமுடியாமல் போய்விட்டது. இருந்தாலும் எங்களுடைய கட்சியினை நிறுவுகின்ற ஆரம்பகடவேலைகளை பலமாவட்டங்களில் செய்ய முடிந்தது.வட மாகாணசபையிலே போட்டியிட்டதன் மூலம் நியமன அடிப்படையில் ஒருஉறுப்பினரும், 2011ம்ஆண்டு கின்னியா நகர சபைதேர்தலில் ஒரு உறுப்பினரும்கிடைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில் காத்தான்குடிக்கு வெளியிலும் எங்களுக்கு பரவலான செல்வாக்கும் ஆதரவும் வரவேற்பும் இருக்கின்றது. வளர்ந்து வருக்கின்ற கட்சி என்றடிப்படையில் எமது கட்சியின் கட்டமைப்புக்களை பல இடங்களிலும் அமைத்து வருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் குறிப்பிட்டளவு உறுப்பினர்களை எல்லா தேர்தல்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.

அஹமட் இர்ஸாட்:- 
அன்மையில் வில்பத்து பிரதேசத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டவர் என்ற ரீதியில் அங்குஇடம்பெறுகின்ற உண்மை நிலை என்ன?

அப்துர் ரஃமான்:- 
வில்பத்து வனவிலங்கு சரணாலயப்பகுதி மீள்குடியேற்றத்திற்காக அழிக்கப்படுகிறது என்பது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் பிரதானமான ஒன்றாகும்.

அடுத்ததாக, சட்டவிரோதமாக இந்த மீள்குடியேற்றங்கள் செய்யப்படுகின்றனஎன்றும் அத்தோடு மீள்குடியேற்றத்திற்கு உரித்தில்லாத பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் மீள்குடியேற்றப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பிலான உண்மை நிலவரங்களைகண்டறியும் பொருட்டு முசலிப் பிரதேசத்திற்கு நாம் கடந்த 11ம் திகதி விஜயம் ஒன்றினை மேற்கொண்டோம்.

அதன்போது திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும்அவதானிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இந்தக்குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே ஆதாரமற்றவை என்பதனைதெரிவிக்க விரும்புகின்றோம்.

மோதறகம ஆறு, வில்பத்து சரணாலயத்தின் வடக்கு எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பார்த்தால் வில்பத்து எல்லைப் பகுதிக்குள் முஸ்லிம்களின் எந்தவொரு குடியேற்றமும் காணப்படவில்லை. மோதறகம ஆற்றின்வடக்குக் கரையினை எல்லையாக கொண்டு முசலிப்பிரதேச செயலகப்பிரிவின் தெற்கு நிர்வாக எல்லைஅமைந்திருக்கிறது.

இந்தப் பிரதேசத்தில் மரைக்கார் தீவு, பாலக்குழிஇமறுச்சிக்கட்டி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி ஆகியகிராமங்களில் முஸ்லிம்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் இவர்களும் அடங்குகின்றனர்.

இவ்வாறுவெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களே தமது பூர்வீகஇடங்களில் தற்போது மீண்டும் குடியேற்றப்படுகின்றனர். அத்தோடு வெளியேற்றப்பட்ட மக்களின் புதிய சந்ததிகளும் இவ்வாறு குடியேற்றப்படுகின்றனர். அந்த வகையில் நோக்கும்போது முசலி பிரதேசமீள்குடியேற்றம் தொடர்பாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை பொய்யானவை என்பது தெளிவாகின்றது.

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பது இனவாதகண்ணோட்டத்தோடு நோக்கப்படுவதனைத் தவிர்த்து ஒருமனிதபிமான பிரச்சினையாக நோக்கப்பட வேண்டும். இந்தமீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பில் அரசியல் வாதிகளின்அதிகார துஷ்பிரயோகங்களோ அல்லது ஏனையமுறைகேடுகளோ இருக்கும் என சந்தேகிக்கப்பட்டால் அதுவேறாகக் கையாளப்பட வேண்டும். முஸ்லிம்களின்மீள்குடியேற்றத்தை முடக்குவதற்கான ஒரு நியாயமாக இதுமாற்றப்படக்கூடாது.'

அஹமட் இர்ஸாட்:-

காத்தான்குடியில்நீங்கள்களமிறக்கப்பட்டு கணிசமான வாக்குளை நீங்கள் பெறும்பட்சத்தில் அது மட்டளப்பு மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை அல்லது காக்கப்பட்டு வரும்காத்தன்குடியின் பிரதி நித்தித்துவமானது இழக்கப்படுவதற்கு நீங்கள்காரணமாக அமைந்து விட மாட்டீர்களா?

அப்துர் ரஃமான்:-

கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பிலே தொடர்ந் தேர்ச்சியாக உழைத்துவருக்கின்றோம். காத்தான்குடியில் பிரதானமாகவும் ஏனைய டங்களில் பரவளாகவும்எங்களுக்கு அரசியல் ஆதரவு இருந்து வருக்கின்றது.

இதுஒரு மாற்றத்தை நோக்கியஅரசியல் வேலைத்திட்டமாகும்.தற்போது இருகின்ற அரசியல் கட்சிகள் நேர்மையான முறையில் தங்களுடையகடமைகளை செய்யவில்லை என்பதற்காகத்தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிதனது அரசியல்பயணத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்விளைவுகளை எதிர்வருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விளங்கிக்கொள்வார்கள். அந்த வகையில் காத்தான்குடி-கல்குடா-ஏறாவூர் என்ற பிரதேச வாதம் கடந்து , காத்தான்குடி பிரதேசத்துகு மாதிரமன்றி முழு மாவட்டத்திற்குமேற்ற , சகல மக்களுக்கும் பிரயோசனம்அளிக்கக்கூடிய மிகத்தரமான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். எதிர்வரும்பாராளுமன்ற தேர்தலில் இன்ஸா அல்லா அதனை நிரூபித்துக் காட்டுவோம்.

அஹமட் இர்ஸாட்:-
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ளுமளவுக்கான வாக்குவங்கியினை காத்தான்குடியில் வைத்திருக்கும் ஹிஸ்புல்லாவினை எதிர்த்து நீங்கள் போட்டியிவதனால் பாதுகாக்கபட்டுவருக்கின்ற காத்தான்குடியின் பிரதிநிதித்துவம் உங்கள் மூலமாக எதிர்காலத்தில்இழக்கப்படும் அபாயம் ஏற்படாதா?

அப்துர் ரஹ்மான்:- 

பாராளுமன்ற தேர்தலைப்பொறுத்தவரையில் இருந்த வருக்கின்ற துரதிஸ்வசமானநிலைமை என்னவென்றால் பிரதேச அரசியல்வாதிகள்பிரதேச வாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யப்பழகிக்கொண்டுள்ளனர்.

அப்பிரதேசவாதத்தை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தது சகோதரர்ஹிஸ்புல்லாதான். 1989ம் ஆண்டு கல்குடாவுக்கு சுழற்சிமுறையில் விட்டுக்கொடுப்புச்செய்வேன் என்று பெரும்தலைவருக்கு வழங்கிய வாக்குறுதியினை ஹிஸ்புல்லாமீறியமையினால் பிரதேசவாதம் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஆகவே பிரதேச வாதஅரசியலை இல்லாதொழித்துமாவடத்தில் வாழுகின்ற ஒட்டுமொத்தமக்களின் நன்மைகளுக்குமாக அரசியல்செய்யும் கட்சியாகநல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது அரசியல்முன்னெடுப்புக்களை மாவட்டத்தில் ஏற்படுத்தநினைக்கின்றது. இதன் அர்த்தத்தினை எதிர்காலங்களில் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

அஹமட் இர்ஸாட்:- 

சகோதரர்ஹிஸ்புல்லாவுடனான நேர்காணலின் பொழுது நீங்கள் அவருடைய வாழ்கைக்கு கலங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்வதாகவும்,செலிங்கோ புறோபிட் செயார் எனும் பிரச்சனையை தேசியத்திலே பூதகரமன பிரச்சனையாக மாற்றுவதகவும் ஓர் பாரிய குற்றச்சாட்டினை உங்களுக்கெதிராக சுமத்தினார் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

அப்துர் ரஃமான்:-

சகோதரர் ஹிஸ்புல்லாவின் இக்குற்றச்சாட்டானது அவரதுமுதிர்ச்சியற்ற பாமரத்தனமான குற்றச்சாட்டாகவே நான்கருதுக்கின்றேன். தனி மனிதர் ஒருவருடைய தனிப்பட்டவிவகாரங்களை நாம் விமர்சிப்பது கிடையாது. ஒருவர் விடும்சமூக அரசியல் தறுகளையே நாம் விமர்சிக்கின்றோம். எதுதனிப்பட்ட விவகாரம் எது பொது விவகரம் என்று வரையரைசெவதில்தான் பலருடம் குழப்பம் இருக்கின்றது.

எப்போது ஒருவருடைய நடவடிக்கை அல்லது முடிவுசமூகத்தை பாதிக்கின்றதோ அப்போது அது பொதுவிவகாரமாக மாறுக்கின்றது. அப்படியான விடயங்களைநாம் விமர்சிக்கின்றோம், கண்டிக்கின்றோம்.

ஹிஸ்புல்லாவினுடைய செலிங்கோ விவகாரத்தினைபொறுத்தவரையில் அது ஒரு பொது விவகாரம் என நம்கருதுவதற்கு காரணம்கள் இருக்கின்றன.

முதலாவதாகசெலிங்கோவில் தனது மனைவியின் பெயரில் கடனை பெறுவதற்கு மக்கள் வழங்கிய ஆணையின் மூலம் கிடைத்த பதவியை அவர் பயண்படுத்தியுள்ளார்.

அடுத்ததாக பிழையானத கவல்களையும் ஆவணங்களையும் வழங்கி பாரிய தொகைகடனினைப் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியிருக்கின்றார். இதன் மூலம் நஸ்டமடைவது செலிங்கோ நிறுவனம் அல்ல.

மாறாக பொது மக்களும்,பொது நிறுவனங்களுமே ஆகும்.எனவேதான் இது ஒரு பொதுவிவகாரமாக இருக்கின்றது. இதைதான் நாம் கண்டிக்கின்றோம். மேலும் இவரது இந்த மோசடியை முதலில் அம்பலபடுத்தியது நாங்கள் அல்ல. இலங்கையில் பிரசுரிக்கப்படும் பிரபல்ய நாளிதலான சண்டே லீடர் ஆங்கில பத்திரிகையாகும்.

அந்த வகையில் நாங்கள் ஒரு போதும் ஹிஸ்புல்லாவின் சொந்த வாழ்க்கையை ஏனைய அவருடைய அரசியல் எதிரிகள் விமர்சிப்பதனை போன்றுநாங்கள் விமர்சிப்பதில்லை.

அஹமட் இர்ஸாட்:- 
காத்தான்குடியில் புதிதாகதிறந்துவைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதசாலையானது இஸ்லாதிற்கு முறண்பட்டதாக அமைக்கப்பட்டுள்ளதாகபரவலான குற்றச்சாட்டு ஹிஸ்புல்லாவிற்குசுமத்தப்படுக்கின்ற நிலையில் நீங்களும்உங்களுடையகட்சியும் அதனை எந்த கோணத்தில்பார்க்கின்றீர்கள்?

அப்துர் ரஃமான்:- 
நாங்கள் இது சம்பந்தமாக மிகதெளிவாக சொல்லியியிருக்கின்றோம். இங்கு முக்கியமாக இரண்டுவிடயங்கள் நோக்கப்பட வேண்யுள்ளது.

முஸ்லிம்களின்வரலாற்றைபேணிப் பாதுக்கக்கும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால்முஸ்லிம்கள் என்ற ரீதியில் நாங்கள்எதைச்செய்தாலும்இஸ்லாமிய வரையறைக்குள் செயற்பட வேண்டும்.

அந்தவகையில் சிலைகளை நிறுவுவது தொடர்பில் உலமாக்களினுடைய தெளிவான வழிகாட்டுதல்களை நேர்மையாக செவியேற்று ஹிஸ்புல்லா நடந்திருந்தால் இவ்விடயம் சர்ச்சைக்குறிய விடயமாக மாறியிருக்கது.

ஆனால் அவரோ இது தொடர்பில் கருத்துச் சொன்ன உலமாக்களை அடக்க முற்பட்டார். சர்வதேச உலமாக்களின் பத்துவாக்களை திரிவு படுத்திமுன்வைத்தார்.

நூதனசாலையினை திறப்பதற்கு முன் உலமாஅக்கள் அதனை பார்வையிடுவதற்கான அனுமதிவழங்கப்படும் எனச் சொன்ன வாக்குறுதியையும் மீறி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முடிவுகளுகும் கட்டுப்படாமல் இதனை திறந்து வைத்துள்ளார். அவருடைய இந்த அடாவடி அரசியலின் காரணமாகவே இந்த பிரச்சினை உருவாகியிருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- 

தேசியத்திலே காத்தான்குடியானது வெளிநாட்டு நகரங்களுக்கு ஒப்பிட்டுபேசப்பட்டுவருகின்றது. அதனோடு 25வருடங்களாக அரசியலில்இருக்கும் ஹிஸ்புல்லாவின் பெயரும் காத்தான்குடியின் வளர்ச்சிக்கு காரணம் எனவும்பேசப்படுகின்றது. அப்படிஎன்றால் இத்தனைக்கும் காரணமாக இருக்கின்ற ஹிஸ்புல்லாவின் அரசியல் பிழை என்று கூறவருகின்றீர்களா?

அப்துர் ரஃமான்:- 

ஒரு விடயம் கவர்ச்சியாக அல்லது பிரபல்யமாக இருக்கின்றது என்பதற்காக அது சரியானது என்று கூறிவிட முடியாது.

ஹிஸ்புல்லாவின் அபிவிருத்தியை பொறுத்த வரையில் கத்தான்குடியில் வெளித்தோற்றத்தில் அவ்வாறான கவர்ச்சி இருக்கின்றது. வெளி ஊர்களிலும் பிரபல்யம் இருக்கின்றது. ஆனால் காத்தான்குடி நகரின் சனத்தொகை, இடநெருக்கடி, சமூக கலாச்சார தனித்துவம், பொருளாதாரம் என்பனவற்றின் அடிப்படையில் காத்தான்குடி நகருக்கு தேவையான விசேட தேவைகளை கருத்தில் கொண்டு அபிவிருத்திகள் இடபெறவில்லை.

கடந்த 25 வருடங்களில் ஹிஸ்புல்லாவினால் உறுவாக்கப்பட்ட வேலை வாய்ப்புக்கள் எத்தனை? வர்த்தகர்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய சந்தை வாய்ப்புக்கள் எத்தனை? அவரால்திட்டமிட்டு செய்யப்பட்ட கல்வி மேம்பாடுகள் என்ன? காத்தான் குடியின் முக்கிய பிரச்சனையாகஉள்ள சனத்தொகை அதிகரிப்பு மற்றும் இடநெருக்கடி என்பவற்றின் அடிப்படையில் வடிகான்பிரச்சனை குப்பைகளை அகற்றும் பிரச்சனை, மாடறுக்கும் மடுவப் பிரச்சினை, நிருவாகஎல்லை மற்றும் காணிப்பிரச்சனை என்பவற்றுக்கு அவரினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட தீர்வுகள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடினால் அவர் மேற்கொண்ட அபிவிருத்திகளின் தரத்தை புரிந்து கொள்ளலாம்.

அஹமட் இர்ஸாட்:- 
சகோதரர் அமீர்அலியின் கோட்டையாக கருதப்படுக்கின்ற கல்குடாவில் உங்களுக்கான தனியான படித்த இளைஞர் அணியொன்று, இருப்பதாக பேசப்படுக்கின்றது. தொடர்ந்துஉங்களுடைய அரசியல் முன்னெடுப்புக்களை கல்குடாவில்எவ்வாறுஅமைத்துக் கொள்ளப்போகின்றீர்கள்?

அப்துர் ரஃமான்:- 
நாம் எல்லா பகுதிகளில்லும் எமது அரசியல் பணிகளை முன்னெடுத்துவருக்கின்றோம். அதேபோல கல்குடாவிலும் எமது பணியினை முன்னெடுத்து வருக்கின்றோம் புதிய அரசியல் கலாச்சாரமாற்றத்தினை ஏனைய பகுதிகளைப்போலவே கல்குடாவிலும் உறுவாக்குவதே எமது நோக்கமாகும்.

அந்தவகையில் எமது இலக்கினை அடைந்து கொள்வதற்காகபடித்தவர்கள் மட்டுமல்லாமல் பலரும் எம்முடன் கல்குடாவில் இணைந்து செயற்பட்டு வருக்கின்றனர். சகலதர்ப்பினரையும் உள்வாங்கிய படியே எமது கட்சியானது தேசியத்திலும் செயற்பட்டு வருக்கின்றது

அஹமட் இர்ஸாட்:-
தேர்தல் முறையில்மாற்றம் கொண்டுவரப்படுமாயின் உக்களுடைய கட்சியானது விகிதாசார தேர்தல் முறைமையினையா அல்லது தொகுதிவாரி தேர்தல் முரைமையினையா ஆதரிக்கும்?

அப்துர் ரஃமான்:-
நடைமுறையில் உள்ள தேர்தல்முரையானதுமுஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல சிறுபான்மை சமூகத்திற்கு சாதகமான தேர்தல் முறையாகும். அதிலும் முக்கியமாக சிதறிவாழுக்கின்ற சிறுபான்மை மக்களுக்கு விகிதாசார முறைமையானது மிகவும் பிரயோசனதாகும்.

அதே இடத்தில் பல பொதுவான பிரச்சனைகளையும் , தீமைகளையும் இந்த தேர்தல் முறை உறுவாக்கியுள்ளது என உணரப்பட்டுள்ளது. விருப்பு வாக்கு முறையினால் ஏற்படும் தனி நபர்களுக்கிடையிலான போட்டி ,அதனால் ஏற்படும் வன்முறைகள், பிரதேச வாதம் என்பன விகிதாசார முறையினால் ஏற்படும் பிரச்சனைகளாக காணப்படுக்கின்றது.

அதே போலவே மாவட்ட ரீதியில்அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படுவதனால் தொகுதி ரீதியாக மக்களினுடைய கேள்விகளுக்கு பொறுப்புச் சொல்லக்கூடிய வகையில்எவறும் இல்லை என்பதும் விகிதாசார முரைமையில் இருக்கின்ற இன்னுமொரு பொதுவான பிரச்சனையாகும். ஆனால் எந்தவொரு தேர்தமுறை மாற்ரமாக இருந்தாலும் அது சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிரதிநித்துவங்களை உறுதி செய்கின்ற தேர்தல் முறை மாற்றமாக இருக்கவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

அஹமட் இர்ஸாட்:- 
கடைசியாக வருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் உங்களுடைய அரசியல் முன்னெடுபுக்கள் தொடர்பாகவும் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற காத்தான்குடி மக்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் எதசைச் சொல்ல விரும்புக்கின்றீர்கள்?

அப்துர் ரஃமான்:- 

கடந்த தேர்தலில் அறிவு பூர்வமாக செயற்பட்டதனை போன்று வருக்கின்ற பொதுத் தேர்தலிலும் மக்கள் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் நமக்கான சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பாராளுமன்ற தேர்தல் என்பது எமது பிரதி நிதிகளை நாமே தெரிவு செய்து கொள்ளும் பெறுமதிக்க தேர்தலாகும் அந்த வகையில் கடந்த காலங்களில் நாம் தெரிவு செய்தவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதனை கருத்தில் கொண்டு சிறந்த மாற்றத்தினை எமக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ள வருக்கின்ற பொதுத் தேர்தலை மக்கள பயண்டுத்திக்கொள்ள வேண்டும் என்பது எமது கட்சியின்வேண்டுகோளாக இருக்கின்றது.

18வது திருத்தச் சட்ட மூலம்தான் மஹிந்த ராஜபக்ஸ்சவின்அத்தனை அரசியல் அடாவடித்தனங்களுக்கும், அடிப்படைகாரணமாக அமைந்தது. அதனை நிறைவேற்றுவதற்கு தமது கைகளை உயர்த்தி ஆதரவளித்தவர்கள்தான் இந்த முஸ்லிம் பிரதிநிதிகள். மாகாண சபையில் இருக்கின்ற அதிகரங்களை குறைப்பதற்கான திவினகம சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கும் எமது முஸ்லிம் பிரதிநிதிகள்தான் முன்னின்று ஆதரவளித்தார்கள்.

அதே போன்று இந்தநாட்டில்முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் கடந்த அரசாங்கத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட பொழுதும் வாய்மூடிமெளனம் காத்தவர்கள்தான் எமது முஸ்லிம்பிரதிநிதிகள். மாத்திரமின்றி நாட்டில் இடம்பெற்ற ஊழல்மோசடிகளெல்லாம் பங்காளிகளாகவும் அதற்கு உடந்தையானவர்களாகவும் இவர்கள் இருந்துள்ளனர்.

இதனை மக்கள் நன்கு உணர்ந்தவர்களாக எதிர்காலத்தில் செயற்பட வேண்டும். ஆகவே நாட்டில் நாம் ஏற்படுத்திய சிறந்த மாற்றத்தினைப் போலவே நமது சமுகத்திலும் ஒரு சிறந்த மாற்றத்தினைஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக எதிர் வருக்கின்ற தேர்தலை முஸ்லிம் சமூகம் பயண்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுவே எமது வேண்டுகோளாகும்.(sa)

நேர்காணல்-அஹமட் இர்ஸாட்:- 
 - 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -