தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவுக்காக நேற்று இராமநாதபுரம் வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்கிறது. எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்று இலங்கை அமைச்சரின் அச்சுறுத்தல் பேச்சு கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை கடற்படையினர் சேதப்படுத்திய தமிழக படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், எனக் குறிப்பிட்டார்.(ந)
