பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சை நிபுணர் நியமிப்பும் / வில்லங்கமும்- ஹுதா

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பலவிதமான குறைபாடுகள் அன்று தொட்டு இன்று வரை காணப்பட்டு வருகின்றது. அதாவது வைத்தியசாலையில் ஆளனிப்பற்றாக்குறையாக உள்ள சிற்றூழியர்கள், மயக்க மருந்து வழங்கும் வைத்தியர், சத்திர சிகிச்சை வைத்தியர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் ஆகியோர் இல்லாமல் இயங்கி வருகின்ற வைத்தியசாலையை கிழக்கு சுகாதார அமைச்சு காணாத நிலையில் கடந்த 2015.04.18 சனிக்கிழமை பொத்துவில் பொதுமக்களினால் செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் பலனாக கிழக்கு சுகாதார திணைக்களத்தினால் ஒரு நிரந்தர சத்திர சிகிச்சை நிபுணர் 2015.04.27ம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருந்த போதிலும் இந்த போராட்டத்திற்கும் இந்நியமனத்திற்கும் எந்தவொரு அரசியல் வாதிக்கும் கட்சிக்கும் இணைப்பு இருக்கும் என்பதும் புரியாதுள்ளது.
ஏன் இடமாற்றத்திற்குள்ளாகியுள்ள மகப்பேற்று வைத்திய நிபுணரின் இடமாற்றத்தை இரத்து செய்ய முடியாதுள்ளது?  ஏன் சிற்றூழியர்களின் வெற்றிடத்தை நிரப்ப முடியாதுள்ளது? 

மேலும், சத்திர சிகிச்சை நிபுணரால் பத்துக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை இடம்பெற்றிருப்பதாக முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களால் நடாத்தப்பட்டு பெறப்பட்ட விடயத்திற்கு எந்தவொரு கட்சி அரசியல்வாதிகளும் கட்சிகளும் குளிர் காய்வது பாரிய சமூக துரோகமாகும்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சத்திர சிகிச்சை நிபுணர் முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் வாதிகளால் நியமிக்கப்பட்டது என்பது முற்றிலும் பொய் - ஊடகவியலாளர் சம்சுல் ஹுதா மறுப்பு


குறிப்பிட்ட செய்திக்கு.........
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -