இலங்கையின் மற்றுமொரு உதவிக் குழு நேபாளம் நோக்கி பயணம்!

நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்காக, இலங்கையில் இருந்து மற்றுமொரு குழு புறப்பட்டுச் சென்றுள்ளது. 

இன்று காலை 10.45 அளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றிலேயே இவர்கள் புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்கள் சகிதம் இவர்கள் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 

இதேவேளை முன்னதாக இரண்டு உதவிக் குழுக்கள் இலங்கையில் இருந்து நேபாளத்திற்கு சென்றுள்ள நிலையில், இவர்கள் மூன்றாவது குழுவென்பது குறிப்பிடத்தக்கது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -