வத்தளையில் காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை முயற்சி!

த்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

கூரிய ஆயுதத்தை தாங்கியவாறு நேற்று (07) இரவு கடைக்குள் சென்ற நபர் யுவதியை வெட்டிக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

வத்தளை - ஹுனுபிட்டி பராக்கிரம மாவத்தையில் வசிக்கும் 19 வயது யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார். 

கொலையை புரிந்த இளைஞன் கத்தியால் கழுத்தை வெட்டிக் கொண்டு படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

காதல் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.(ந)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -