காத்தான்குடி பாடசாலைக்கு மூன்று மாடிக்கட்டிடம்,முதலமைச்சர் அடிக்கல் நட்டு வைத்தார்!

காத்தான்குடி சாவியா மகளிர் வித்தியாலயத்துக்கு மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றை அமைக்கும் நோக்குடன் முதல் கட்ட வேலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் நைமா ஸலாம் தலைமையில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட பல பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் குறிப்பிட்ட பாடசாலை நிருவாகம், கிழக்கு மாகண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆகியோர் இணைந்து விடுத்த கோரிக்கையை ஏற்று மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை அமைக்க அடிக்கல் நடப்பட்டது. ஆரம்ப கட்ட நிதியாக 2.7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மீண்டும் இக்கட்டிடம் பூரணமடைய உதவிகள் வழங்கப்படவுள்ளன.


குறிப்பிட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் இவர்களுடன் வலயக் கல்விப்பணிப்பாளர் சேகு அலி, மற்றும் பாடசாலை சமூகம், அரசியல் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -