அஹமட் இர்ஸாட் -
அஹமட் இர்ஸாட்:- தமிழ் பேசும் மகன் ஒருவர் ஆட்பதிவு தினைகளத்தில் ஆணையாளர் கடமையாற்றுவதானது பெருமைபட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் இந்த நாட்டில் வாழுக்கின்ற தமிழ் பேசும் மக்களுக்காக உங்களுடைய சிறிய அறிமுகமொன்றினை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஆணையாளர் நசீர்:- நான் குருனாகல் மாவட்ட கெக்னுகொள்ள பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவன். அந்த வகையில் எனது பாடசாலைக் கல்விக்கு பிற்பாடு ஜாமியா நளீமியவில் எனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ததோடு 1998ம் ஆண்டு துறைமுக அபிவிருத்து புணர்வாழ்வு புணரமைப்பு அமைச்சில் நிருவாக சேவைகளுக்காக உள்வாங்கப்பட்டு உதவிச் செயலாளராக கடமையினை பொறுப்பேற்றேன். அதற்குப்பிற்பாடு வடமாக புணர்வாழ்வு பணிப்பாளராகவும்,குடிவரவு குடியகழ்வு திணைகளத்தில் பிரதி கட்டுப்பாட்டளராகவும், சில வருடங்கள் கடமையாற்றியுள்ளதோடு, 2012ம் ஆண்டு தொடக்கம் ஆட்பதிவு தினைக்களத்தில் இயக்கம் மற்றும் தொழில்நுட்ப ஆணையாளராக எனது சேவையினை இந்த நாட்டு மக்களுக்காக செய்து வருக்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- இலங்கையில் அடையாள அட்டை சம்பந்தமாக பேசபடுக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் அடையாள அட்டை பிரச்சனையானது எந்த அளவில் இருக்கின்றது.
ஆணையாளர் நசீர்:- தோட்டத் தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பது மறைக்கமுடியாத உண்மையாக இருக்கின்றது. அவர்களுடைய சிரமங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருக்கின்றோம். மலையக மக்களுக்கு இருக்கின்ற அடையாள அட்டை சம்பந்தமான பிரச்சனையில் மிக முக்கியமாக கருதப்படுவதுதான் அடையாள அட்டைக்காக தேவைப்படுக்கின்ற பிறப்பு அத்தாட்டி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதாகும். ஆகவே அவர்களுக்கு அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள தேவையாக இருக்கின்ற பிறப்பு அத்தாட்சி பத்திரத்துக்கு மாற்றீடான தஸ்தாவேஜ்சுக்களை பொலிசாருடன் நாங்கள் கலந்தாலோசித்து பெற்றுக்கொடுத்து அடையாள அட்டைகளை வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.
அஹமட் இர்ஸாட்:- அடையாள அட்டை சம்பந்தமாக நீங்கள் அறிமுகப்படுத்த தீர்மாணித்துள்ள புதிய தொழில்நுட்ப முறைகள் பற்றி சிறிது விளக்கமாக கூறமுடியுமா?
ஆணையாளர் நசீர்:- இன்று வரைக்கும் அடையாள அட்டை வளங்குவதில் மரபுரீதியான நடைமுறைகளே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் இருக்கின்ற அடையாள அட்டையானது சர்வதேச தரத்துக்கு அமைவாக இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு விரல் அடையாளங்களோடு இலத்திரனியல் அடையாள அட்டைகளை வினியோகிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெற்று வருக்கின்றது. இதற்கான சட்ட ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டும் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்துடன் அனுமதிக்காக பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே மிகவிரைவில் இலத்திரனியல் அடையாள அட்டையானது இந்த நாட்டில் வினியோகிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- அடையாள அட்டை சம்பந்தமாக இடம் பெறுக்கின்ற ஊழல்கள் மோசடிகள் சம்பதமாக கூறினீர்கள் அதனை பட்டியல்படுத்த முடியுமா?
ஆணையாளர் நசீர்:- ஆம், சாதாராணமாக இலங்கையில் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள முடியாது என்ற சூழ்நிலை எந்த நிலையிலும் இந்த நாட்டில் காணப்படுவதில்லை. அந்தவகையில் இத்தினைக்களம் எவ்வாறு மிகவிரைவில் மக்களுக்கு அடையாள அட்டையினை பெற்றுக்கொடுக்க முடியுமோ அதற்கமைவாக அனைத்து கருமங்களை எமது தினைக்களம் செய்துவருக்கின்றது. ஆகவே மக்கள் இது சம்பந்தமான போதிய அறிவின்மையினால் போலித்தகரகர்களிடம் மாட்டிக்கொண்டு போலியான தஸ்தாவேஜ்சுகளை தயாரித்து அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்காக தரகர்களுக்கு கூடுதலான பணத்தினையும் செலவு செய்க்கின்றனர்.
இது சம்பந்தமாக தெளிபடுத்தல்களை மக்களுக்கு வழங்குவதற்காக பிரதேச செயலாளர் ஊடாக கிராம சேவையாளர்களுக்கு வழங்கியிருக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- நாட்டில் இடம்பெறுக்கின்ற கொல்லை, கொலைச் சம்பவங்களுக்கும், வெளிநாட்டில் தொழில் புரிக்கின்றவர்களுடைய அடையாள அட்டைகள் சட்டத்துக்கு புறம்பான முறையில் பயண்படுத்தப்பட்டு தேர்தலில் வாக்களிக்கும் முறைமையும் எமது நாட்டில் கடைப்பிடிக்கப்படுக்கின்றது. ஆகவே நீங்கள் கூறுக்கின்ற இலத்திரனியல் அடையாள அட்டை முறைமாயானது அறிமுகப்படுத்தப்பட்டால் அவ்வாறான சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் தடுக்கப்படுமா?
ஆணையாளர் நசீர்:- நிச்சயமாக நான் நம்புக்கின்றேன். ஒருவருடைய அடையாள அட்டைக்கு தேவையான தரவுகளை கச்சிதமான முறையில் வெளிபடுத்தக்கூடிய வகையிலும், ஏனையோர்கள் அதன் தரவுகளை இலகுவில் அறிந்து கொள்ளக்கூடியதுமாகவே நவீன தொழில் நுட்பத்துடன் இலத்திரனியல் அட்டைகளை வினியோகிக்கப்பட இருக்கின்றன. MRZ Machine Readable Zone எனும் இலகுவில் இலத்திரனியல் இயந்திரங்களினுதவியுடன் உரியவருடைய தகவல்களை கச்சிதமான முறையில் பெற்றுக்கொள்ளும் தன்மையினை அறிமுகப்படுத்தப்படும் பொழுது நீங்கள் கூரிய சட்டத்துக்கு புறம்பான அனைத்து குற்றச்செயல்களும் தடுக்கப்படும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- நாட்டில் தற்போது எந்தனை சதவீதமான மக்கள் அடையாள அட்டைகள் தேவைப்பாடுள்ளவர்களாக இருக்கின்றார்கள்?
ஆணையாளர் நசீர்:- சாதரணமாக ஒவ்வொருவருடமும் 5 தொடக்கம் 6 இலட்ட்சம் வின்னப்பபடிவங்கள் முதலாவது தடவைக்கான வின்னப்படிவங்களாக கிடைக்கின்றன. 4 அல்லது 5 இலட்டசம் புதுப்பித்தல் அல்லது தொலைந்த அடையாள அட்டைகளுக்காக வின்னப்பங்களாக கிடைக்கிக்கப் பெறுக்கின்றது. அன்னளவாக வருடத்துக்கு ஒரு மில்லியன் வின்னப்பபடிவங்கள் கிடைக்கப் பெறுக்கின்றது. ஆகவே நாங்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாவட்டத்தின் அடையாள அட்டைகள் தேவையுள்ளவர்களை பற்றிய கணக்காய்வினை மேற்கொண்ட பொழுது அது எங்களுக்கு திருப்தி அளிக்ககூடிய விடயமாக இருக்கவில்லை. ஆகவே ஒரு மாவட்டத்தில் 20000 பேர் அளவிலேயே அடையாள அட்டைகளுக்கான தேவைப்பாடுடையவர்களாக இருப்பார்கள் என நாங்கள் நினைக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- இந்த இலத்திரனியல் அடையாள அட்டையினை அரச அங்கீகாரத்துடன் இந்த நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு எவ்வளவு காலம் உங்களுக்கு இன்னும் தேவையாக உள்ளது?
ஆணையாளர் நசீர்:- இதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள எல்லாம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வின்னப்படிவங்கள் மற்றும், விரல் அடையாளக்களை பெற்றுக்கொள்வதற்கான இயந்திரங்களும் தயார் செய்யப்பட்டு பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு இப்போது தேவையாக உள்ளது திருத்தப்பட்ட யாப்பின் அங்கீகாரம் மட்டுமே. அங்கீகாரம் கிடைத்தவுடன் மக்களின் தரவுகளை திரட்ட வேண்டும். மக்களின் தரவுகளை திரட்டுவதற்க்கு எங்களுக்கு ஒன்பது மாதங்கள் தேவைப்படுக்கின்றது. ஆகவே இரண்டு வருடங்களுக்கல் இப்புதிய நவீன இலத்திரணியல் அடையாள அட்டைகளை வழங்கலாம் என நினைக்கின்றோம்.
அஹமட் இர்ஸாட்:- தற்போது பூரணமாக ஒர் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்வதற்க்கு வின்னப்படிவம் சமர்பிக்கப்பட்டதற்கு பிற்பாடு உங்களுக்கு எவ்வளவு காலம் தேவைபடுக்கின்றது அடையாள அட்டையினை வினியோக்கிக்க?
ஆணையாளர் நசீர்:- தற்போதைய சூழ்நிலையில் எங்களுக்கு தேவையான வின்னப்படிவத்துடனான தஸ்தாவேஜ்சுகளுடன் ஒரு அடையாள அட்டையினை வினியோகிப்பதற்கு இரண்டு கிழமைகள் தேவைப்படுக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- இதனை பன்முகப்படுத்தும் திட்டங்கள் ஏதும் வைத்துள்ளீர்களா?
ஆணையாளர் நசீர்:- அமைச்சரவையின் தீர்மானத்தின்படி எல்லா மாகாணங்களிலும் இதற்கு தேவையான அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய வடக்குக்கான காரியாலைத்தினை வவுனியாவில்லும், கிழக்குக்கான காரியாலைத்தினை மட்டக்களப்பிலும் அமைத்துள்ளோம். அதே போன்று மிக விரைவில் ஏனைய மாகாணங்களையும் மையப்படுத்தி காரியாலையங்களை நிறுவ இருக்கின்றோம். அது மட்டுமல்லாமல் நாட்டில் இருக்கின்ற 331 பிரதேச செயலகங்களிலும் 2 உத்தியோகத்தர்கள் அடையாள அட்டைகளுக்கான தரவுகளை பேனுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போன்று கணனிகள், மற்றும் தஸ்தாவேஜ்சுகளை நகல் செய்யும் ஸ்கேனிங் இயந்திரம், விரல் அடையாளங்களை பதிவிடும் இயந்திரம், அதனோடு தகவல்களை இலகுவில் எமது தினைக்களம் பெற்றுக்கொள்ளும் படியாக இண்டனெட் வசதிகள் அனைத்தையும் பிரதேச செயலகங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
அஹமட் இர்ஸாட்:- நாவீன் அடையாள அட்டை என்று சொல்லப்படும் இந்த இலத்திரணியல் அடையாள அட்டையாள அட்டையில் மூன்று மொழிகளிலும் தரவுகள் பொறிக்கப்பட்டிருக்குமா?
ஆணையாளர் நசீர்:- தற்போது வழங்கப்படுக்கின்ற அடையாள அட்டையில் கூட தமிழ் சிங்களம் எனும் இரண்டு மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக உத்தேசிக்கப்பட்டுள்ள இலத்திரணியல் அடையாள அட்டையில் இரண்டு மொழிகளும் உள்வாங்கபட்டிருக்கும் அதே போன்று ஆங்கில மொழியும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. நான் நினைக்கின்றேன் மூன்று மொழியும் அதில் உள்வாங்கப்படும் என.
அஹமட் இர்ஸாட்:- தூரத்தில் இருப்பவர்கள் இலகுவில் ஓர் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?
ஆணையாளர் நசீர்:- பாடசாலை மாணவர் என்றால் அதிபர் ஊடாக விண்ணப்பிக்க முடியும்., தோட்டத் தொழிலாளிகளென்றால் தோட்ட துறைமார்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும். கிராமங்களில் வாழுக்கின்றவர்கள் கிராம சேவகர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிதினை பூர்த்தி செய்தவர்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எமது தினைக்களத்துக்கு வந்து ஒரே நாளில் பெற்றுக்கொள்ள முடியும். மாறாக தாபாலில் அனுப்புவர்கள் இரண்டு கிழமைகளில் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- இலங்கையை பொறுத்தவரையில் யுத்தத்துக்கு முற்பட்ட காலம் யுத்தத்துக்கு பிறப்பட்ட காலம் என பலதுறைகளையும் உள்டக்கியதாக பார்க்கப்படுக்கின்றது. அந்த வகையில் யுத்தத்துக்கு பிற்பட்ட காலம் என்ற பார்வையில் அடையாள அட்டையின் தேவைப்பாடு நாட்டில் எந்தளவில் இருக்கின்றது?
ஆணையாளர் நசீர்:- சாதாரணமாக் அடையாள அட்டையின் மூலம் சேவையினை இலகுபடுத்துதல் என்பது எமது நாட்டில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் முக்கிய விடயமாக காணப்படுக்கின்றது. அந்த வகையில் சாரதி அனுமதி பத்திரம், கடவுசீட்டு, மற்றும் ஏதாவது ஒரு பெறுமதிமிக்க பொருளினை கொள்வனவு செய்யும் பொழுது ஒருவருடைய அடையாளத்தினை பதிவு செய்து கொள்வதும், அடையாளப்படுத்திக் கொள்வதும் முக்கிய விடயமாக இருக்கின்ற படியினால் யுத்தத்துக்கு முன் யுத்ததுக்கு பின் என்றில்லாமல் ஒருவருக்கு அடையாள அட்டையின் தேவைப்பாடானது உரிய வயதாகும் பட்டசத்தில் முக்கிய தேவைப்பாடான விடயமாக இருக்கின்றது என்னபது எனது கருத்தாகும்.
அஹமட் இர்ஸாட்:- தற்போது ஒருவர் சட்டத்தினை மீறி ஒன்றுக்கு மேற்றப்பட்ட கடவுச் சீட்ட்டுக்களை பெறுகின்றனர். கடவுச்சீட்டினை பெறுவதற்கு அடையாள அட்டையானது மிகமுக்கியமாக காணப்படுக்கின்ற எமது நாட்டில் இவ்வாறான குறைபாடுகளை ஆணையாளர் என்ற வகையில் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
ஆணையாளர் நசீர்:- கடந்தகாலங்களில் மணித சிரமங்களுக்குமத்தியிலும், கணனிமயமாக்கப்பட்டாத காரணத்தினாலும் எமது தினைக்களத்தினால் பலருக்கு ஒரே இலக்கத்தினை கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டமையானதும், பல இலக்கங்கள் ஒருவருக்கு வழங்கப்பட்ட சூழ்நிலையும் எமது தினைக்களத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு தினைக்களத்தில் இருக்கின்ற குறைபாடுகளை தப்பானவர்கள் பயண்படுத்திக்கொண்டும் இவ்வாறான ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுக்களை சட்டத்துக்கு முறனான முறையில் பெற்றுவருக்கின்றனர். ஆனால் இலத்திரனியல் அட்டையாள அட்டை வினியோகத்திற்குப் பிற்பாடு இவ்வாறான குறைகள் இடம்பெறாது என்பதில் திடமாக இருக்கின்றோம். எவ்வாறாயினும் தப்புச்செய்பவர்கள் எங்கையாவது தங்களுடைய திறமைகளை காட்டியேயாகுவார்கள் என்பதில் சந்தேகம் இருக்கவும் வாய்ப்பில்லாமலில்லை.
அஹமட் இர்ஸாட்:- ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது உங்களது தினைக்களத்துக்கு தற்போது தேவையாக உள்ள விடயங்கள் எவை?
ஆணையாளர் நசீர்:- அடையாள அட்டைகளை வெட்டி எடுக்கின்ற இயந்திரங்கள் எமது தினைக்களத்தில் மிகவும் பழமைவாய்ந்ததாக காணப்படுக்கின்றது. இவ்வாறன இயந்த்திரங்களை சர்வதேசத்தில் எங்கும் பயண்படுத்துவதில்லை. அதனை திருத்தி அமைத்துக்கொள்ளக்கூடிய வழிவகைகளும் இலங்கையில் காணப்படுவதில்லை. ஆகவே இதற்கு பதிலான புதிய இயந்திரங்கள் எமது தினைக்களத்துக்கு தேவையானவையாக உள்ளது.
அஹமட் இர்ஸாட்:- நீங்கள் பதவியேற்றதற்கு முற்பாடு இருந்த ஆட்பதிவு தினைக்களத்தின் சேவையும் உங்களுடைய பதவிக்கு பிற்பாடான சேவையானது மக்களுக்கு திருப்தியானவையாக இருக்கின்றதா?.
ஆணையாளர் நசீர்:- எமது ஆணையாளர் சரத்குமாரவும் நானும் குடிவரவு குடியகழ்வு தினைக்களத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள் என்ற ரீதியில் இந்த தினைக்களத்தினை மக்களுக்கான சேவையினை செய்யும் ஓர் சிறப்பான தினைக்களமாக கொண்டு செல்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருக்கின்றோம். அந்தவகையில் இரவுபகல் பாராது ஊழியர்களும் அயராது உழைக்கின்றனர். நவீன அடையாள அட்டையினை வழங்குவது ஒரு புறமிருக்க புலக்கத்தில் உள்ள அடையாள அட்டையினை வழங்குவது என்பதும் சிரமமான விடயமாகவே உள்ளது. முயற்சிகளும் உத்வேகமும் அதிகாரிகளிடம் காணப்படுக்கின்றது. அத்துடன் இங்கு கடமையாற்றுகின்ற நிருவாக உத்தியோகத்தர்கள் தொடக்கம் அடிமட்ட ஊழியர்கள் வரை மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயற்படுவதானது எனக்கு திருப்தி தரும் விடயமாக காணப்படுக்கின்றது.
வீடியோ ஆணையாளர் நசீருடனான நேர்காணல்:-
