இக்பால் அலி-
முன்னாள் அமைச்சர் ஜொன்ஜ்டன் பெர்ணான்டோ கைது செய்தது குருநாகல் மஜிஸ்ரேட் நீதி மன்றத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர்மார்கள் கருத்துத் தெரிவித்தனர் இதில் முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக ஊடகத்திற்குக் கருத்துத் தெரிவிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷடன் இணைந்துள்ளவர்களை ஒவ்வொருவராக சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக எங்களுக்குத் தெரிகின்றது.
இவர்கள் நாட்டை நாசமாக்கிளார்கள், பொருளாதாரத்தை நாசமாக்கினார்கள். 100 நாள்கள் எதுவுமே செய்யவில்லை. இதற்குமாறாக பலிவாங்குவது தொடர்பாக எங்கள் மக்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கையினையே செய்து கொண்டிருகின்றனர். அந்த சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒரு போதும் பயமில்லை. எங்களுடைய போராட்டம் முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமாராக்கும் வரை ஓயப் போவதில்லை.
இதனை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம். மஹிந்த ராஜப்கஷவை பிரதமராக்குவதற்கான பொதுக் கூட்டம் குருநாகல் நகரில் எதிர்வரும் 08 ஆம் திகதி பி. ப. 3.00 மணிக்கு நடைபெறும் எல்லோரும் ஒன்று சேருங்கள் என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதி அமைச்சர் இந்திக பண்டார கருத்துத் தெரிவிக்கையில்முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ கடந்த கூட்டுறவு சங்கக் கடையில் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சாட்டுப்பட்டடு கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். இதில் விசேடமாக நாங்கள் கேட்டுக் கொள்வது சாதாரணமானதும் நியாயமானதுமான முறையில் இந்தப் பிரச்சினைக்கு தீப்பை வழங்க வேண்டும் என்று பொது மக்கள் சார்ப்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில் ஜனவரி எட்டாம் திகதி முதல் நாங்கள் நல்லாட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எத்தனை பேர் சிறை அடைக்கப்பட்டுள்ளார்கள். எத்தனையோ பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 100 நாளை எடுத்துக் கொண்டால் எங்களுடைய பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள். சிறையில் இருப்பதைக் காண்கின்றோம்.
இதேவேளை வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.குருநாகல் நீதி மன்றத்திற்கு முன்னாள் கணிசமாள ஆதிரவாளர்கள் கலந்து கொண்டனர். இதற்காக பஸ்களிலும் வாகனங்களிலும் பல இடங்களிலிருந்து வருகை தந்திருந்தனர்.
அவர்கள் பல கோஷங்களையும் கருத்துக்களையும் பரிமாறக் கூடியதாக இருந்தன. கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் செய்த ஊழல்களையும் விசாரணை செய்ய வேண்டும். அதேபோல அமைச்சர் ரிசாட் பதியுனையும் விசாரணை செய்து கைது செய்ய வேண்டும் என்ற பல ஆக்ரோசமான கருத்துக்கள் பரிமாறப்பட்டதைக் கேட்கக் கூடியதாக இருந்தன.றி
.jpg)
.jpg)
.jpg)
.jpg)