அதாஉல்லா அணியில் இருந்து றிஷாத் பதியுதீன் அணிக்கு மாறினார்- கலாநிதி சிராஸ்

எம்.வை.அமீர்-

ல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பிரதி அமைப்பாளராக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடாக நேரடி அரசியலில் பிரவேசித்த கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடந்த மாநகரசபைத் தேர்தலின்போது அதிக வாக்குகளைப் பெற்று கல்முனை மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் முதல்வராக செயற்பட்டு கல்முனை மாநகரசபையின் முன்னேற்றத்துக்கு பல்வேறுபட்ட விதங்களில் உழைத்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முடிவின் கீழ் குறித்த பதவியை இராஜினாமா செய்த கலாநிதி சிராஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்து சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையை பெறும் நோக்கில் அக்கட்சியில் செயற்பட்டார். அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாத இச்சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருது மக்களின் வேண்டுகோளின் பெயரில் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து அக்கட்சியின் தேசிய பிரதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -