ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது!

ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-
காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது வருட நிறைவினை முன்னிட்டு நடைபெற்று வந்த கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கு தெரிவான காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் விளையாடியது.

போட்டி முடிவில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம், பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தை 4:0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

இப்போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் சேகு அலி சேர் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவித்தார். றி


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -