இலவசக் கல்வியின் அடிப்படைச் சித்தாந்தம், அறநெறி, கல்வியின் சமூக சமநிலை என்பவற்றுடன் முரண்படுமளவிற்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இந்த அபரிமிதமான கட்டணங்கள் அமைந்திருப்பதாக இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.
பேராதனை, சப்ரகமுவ, களனிப் பல்கலைக்கழகங்களும் வெளிவாரிப் பட்டப் படிப்புகளை நடத்துகின்றன. ஆனால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கட்டணங்கள் சாதாரண நடுத்தர மாணவர்களின் குடும்ப பொருளாதார தகுதிகளை மீறும்வகையில் அமைந்திருப்பது கவலையளிக்கின்றது.பாட நெறிக்கு தென்/கிழக்கு பல்கலைகழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வெளிவாரிப் பட்டப்படிப்புக்காக அறவிடப்படும் கட்டணம் பின்வருமாறு:
கலைமாணி
பதிவு கட்டணம்
3 வருட பாடநெறி
தென்/கிழக்கு பல்கலைகழகம் - பதிவுக் கட்டணம் -1000/=
3 வருட பாடநெறிக்கட்டணம் -128,000/=
சப்ரகமுவ பல்கலைக்கழகம் பதிவுக்கட்டணம் -2500/-
3 வருட பாடநெறிக்கட்டணம் -26,500/=
பேராதனை பல்கலைக்கழகம் பதிவுக் கட்டணம்- 1500/=
3 வருட பாடநெறிக்கட்டணம் - - 3,300/=
தெ.கி.பல்கலைக்கழகமானது சப்ரகமுவ பல்கலைக்கழகம் பாடநெறிக்காக அறவீடு செய்யும் தொகையினை விட 5மடங்கு கூதலான தொகையினையும் பேராதனைப்பல்கலைக்கழகம் அறவீடுசெய்யும் தொகையினைவிட 25மடங்கு கூடுதலான தொகையினையும் மாணவர்களிடமிருந்து அறவீடு செய்து வருவது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாததும் இத்திட்டமானது கல்வியினைவிடவும் பணமுழைக்கும் சார்பு நோக்கம் கொண்டதாகவும்
உள்ளதென மாணவர்களும் பெற்றோர்களும் முதலமைச்சரிடம் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
வருடந்தோறும் உயர்தரப்பரீட்சையில் திறைமையாக சித்திபெறும் இலட்சக்கணக்கான மாணவர்களில் 75மூ மானவர்கள் பல்கலைக்கழக அனுமதிகிடைக்காமல் தவறவிடப்படுகின்றனர். இது இந்நாட்டு உயர்கல்வி முறை,பொருளாதார நிலைமையிலுள்ள குறைபாடாகும்.இதற்காக விவேகமுள்ள கல்வித்தாகமுள்ள வறிய மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது.
இவ்வாறு விடுபட்ட மாணவர்களில் பெரும்பாண்மையினருக்கான உயர்கல்விக்கான முக்கிய உபாயமாகவே வெளிவாரி பட்டப்படிப்பு ஏற்பாடுகள் பல்கலைக்கழகங்களினால் செய்யப்படுகின்றன. அந்தவாய்ப்பினையும் உயர்கட்டணங்களை அறவீடுசெய்து தென்கிழக்கு பல்கலைக்கழகம் அடைக்கநிiனைப்பது கல்வித் தர்மமாகாது.
மாணவர்கள்,பெற்றோர்களின் முறைப்பாடுகளை ஆழ்ந்த கரிசனையோடு ஆய்ந்து கொண்டிருக்கும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெ.கி.பல்கலைக்கழகத்தின் பேரவையின் (Council) கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாகவும்,
கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பழீல் மேலும் குறிப்பிட்டார்.
